இந்நிலையில் வேல்முருகன் நேற்று சேத்தியாதோப்பில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"நான் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளேன். ஜனவரி 15- ஆம் தேதி தை முதல்நாளில் இந்த கட்சி தொடங்கப்படும். கடசியின் பெயர், மற்றும் கொடி போன்றவை பின்னர் முடிவு செய்யப்படும். ஜனவரி 1மாம் தேதி மக்களை திரட்டி பொது கூட்டம் நடத்துவேன் அப்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன்.
இந்த கிராமத்தில் ஏராளமான வன்னியர்கள் உள்ளனர். இட ஒதுக்கீட்டுக்காக தீவிரமாக போராட்டம் நடத்தியவர்கள் எனவேதான் இந்த பகுதியை தேர்வு செய்து எனது கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்.
முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிறமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு கட்சி பெயரை முடிவு செய்வேன். மேலும் தமிழக தேர்தல் அலுவலகம், இந்திய தேர்தல் கமிஷன் ஆகியவற்றிடமும் ஆலோசனை நடத்தி கட்சி பெயரை தேர்வு செய்வோம். இதற்காக விரைவில் டெல்லி சென்று தேர்தல் கமிஷனிடம் பேச இருக்கிறோம்.
எங்கள் கட்சி தாய் தமிழர்களுக்காக போராடும் சாதி, மதம் சார்பற்ற கட்சியாக இருக்கும். எல்லாதரப்பு மக்களையும் கவரும் வகையில் கட்சியை நடத்துவோம். நாங்கள் கட்சி தொடங்கியதும் ஏராளமான பிரமுகர்களும், தொண்டர்களும் எங்கள் கட்சியில் சேர உள்ளனர்."
-க.கா.செ
நன்றி.இந்நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக