தமிழகத்தில் மொத்தம் 6,696 டாஸ்மாக் கடைகள் உள்ளன.சென்னையில் மட்டும் 441 கடைகள் குடிகாரர்களின் தேவையை நிறைவு செய்கின்றன. இவ்வாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்றும், அதற்கு முந்தைய நாளும் டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகள் விறுவிறுப்பாக விற்பனையாகின.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக தினமும் 45-50 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.52 கோடிக்கும், கிறிஸ்துமஸ் அன்று ரூ.68 கோடிக்கும் என மொத்தம் ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள் மட்டும் 24ந் தேதி 1,34,000 கேஸ்கள் விற்பனையாகின. பீர் 56,000 கேஸ்கள் விற்பனை ஆனது.25 ஆம் தேதி 1,70,000 மதுபான கேஸ்களும்,93,000 பீர் கேஸ்களும் விற்பனையாகின.
புயல் அடித்தால் என்ன? சூறாவளியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் என்ன? குடிகாரர்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே அரசின் கவலை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக