அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
02 டிசம்பர், 2011
கொள்ளுமேடு தமுமுக&மமகவின் பொதுகுழு கூட்டம்
கொள்ளுமேடு கிளை தமுமுக&மமகவின் பொதுகுழு வியாழன் கிழமை மாவட்ட செயலாளர்.N. அமானுல்லா தலைமையில் மிகவும் எழுச்சிவுடன் நடைப்பெற்றது. பொது குழுவிற்கு நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர். இந்தியாவின் கருப்பு தினமான எதிர்வரும் டிசம்பர் 6 ஆர்ப்பாரட்ட சம்பந்தமாவும்,நமதூர் சகோதரரின் மகள் மருத்துவ உதவி பற்றியும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் !
டிசம்பர் ஆர்பாராட்ட களத்திற்கு நமதூர் கிளை சார்பாக ஐந்து வேன்களில் செல்லவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் நமதூர் சிராஜ்மில்லத் விதியில் இருக்கும் சகோ. முகமது இஸ்மாயில் மகள் மருத்துவத்திற்க்காக 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பெற்றது.
மிகவும் முக்கியமாக ஐவேளை தொழுகையை அனைவரும் கண்டிப்பாக தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும் என முடிவு செய்யப்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக