டயர்களில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும் அனை அனைத்துமே காற்றின் அழுத்ததிலேயே செல்லும். ஆனால், டயர் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான பிரிட்ஜஸ்டோன் காற்றின் அழுத்தம் இல்லாமல் செல்லும் கான்செப்ட் மாடல் புதிய ஏர்லெஸ் டயரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டயரில் காற்றுக்கு பதில் புதிய தொழில்நுட்பம் கொண்ட பகுதியை கொண்டிருக்கிறது. இதனால், வழக்கமான டயர்கள் போன்று இந்த டயரும் ஓடுகிறது. மேலும், இந்த ஏர்லெஸ் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த டயர் காற்று இல்லாததால் டியூப் வெடித்து விபத்துக்கள் நிகழாது. மேலும்,பஞ்சராகாது என்பதால் 100 சதவீதம் டயர்களால் விபத்து நிகழாது என்று பிரிட்ஜஸ்டோன் தெரிவி்த்துள்ளது.
இதுதவிர, இந்த டயர்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதுடன் மறு சுழற்ச்சியும் செய்ய முடியும் என்று பிரிட்ஜஸ்டோன் தெரிவித்துள்ளது. சாதாரண டயர்களைவிட இதை குறைந்த விலையில் கிடைக்கும் என்று பிரிட்ஜஸ்டோன் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக