அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
07 டிசம்பர், 2011
சிதம்பரத்தில் தமுமுகவின் கடலூர் மாவட்ட (தெற்கு)டிசம்பர் 6 கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து தேசத்தை காப்போம் நம் உரிமைகளை மீட்போம் டிசம்பர் ஆறு என்ற கருப்பு வரலாற்றை மாற்றி அமைப்போம் என்ற இடி முழக்கத்தோடு
பாபர் மசூதி இடிப்பு நமது நாட்டின் மதசார்பற்ற மான்பிற்கு அவமானத்தை ஏற்படுத்திய செயலாகும். பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பிரிவு வழங்கிய தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நல்ல வேளையாக இந்த தீர்ப்பு வினோதமானது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு அதனை நிறுத்தி வைத்துவிட்டது. மேல்முறையீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைந்து தீர்ப் பினை வழங்க வேண்டும். லிபர்ஹான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக