அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
08 டிசம்பர், 2011
[சினிமா நடிகையின் மன மாற்றம்!
ஒரு மனிதனின் மனத்தில் நேர் வழி வருவது எந்த நேரம் என்று யாருக்கும் தெரியாது. பிலிப்பைனில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா தற்போது ஹதிஜாவாக தனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய சங்கமத்தில் ஐக்கியமாகி உள்ளார். கோடிக்கணக்கான வருமானம் பேரும் புகழும் இவரைத் தேடி வரும்பொழுது அனைததையும் உதறி விட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற முடிவுக்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜெததா வந்த அவரை சகோதரர்கள் பேடடி எடுத்தனர். தனது பழைய வாழவில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்தெறியப்படடிருப்பதாகவும், இனி வரும் காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்த பெண் சொல்லும் அழகை பாருங்கள்.
சிலர் சொல்வது போல் ஒரு கையில் கத்தியும் மறு கையில் குர்ஆனையும் வைத்துக் கொண்டு எதை முடிவு செய்கிறாய் என்று யாரும் இவரை வற்புறுத்தவில்லை. தனக்கு இந்த முடிவால் எதிர்ப்புகளும் பண இழப்பும் ஏற்படும் என்று நன்றாகத் தெரிந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார். பிலிப்பைன் இஸ்லாமிய நாடு கிடையாது. கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. எந்த நிலையில் இருந்து பார்த்தாலும் குர்ஆனை விளங்கி முகமது நபியின் போதனைகளை விளங்கியே இவர் தனது மார்க்கத்தை தேர்நதெடுத்தள்ளதை அறியலாம்.
'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனததில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக