ஒவ்வொரு இயந்திரமும் தினசரி Maintance (பராமரிப்பு) என்பதை செய்து வந்தால்தான், அந்த இயந்திரத்தின் மூலம் எப்போதும் நல்ல பலன்களைப்பெறலாம்.
அதேமாதிரி நமது உடலாகிய இயந்திரத்தையும் தினசரி முறையாக பராமரிக்க வேண்டும். அதாவது தினமும் தவறாது ஏதாவது உடற்பயிற்சி முறைகளை செய்து வர வேண்டும்.
உடல் நலத்தைப் பற்றி ஒரு முக்கிய பிரமுகர் சொன்னது,
"உனது ஆரோக்கியம் 3 கி.மீ.க்கு அப்பால் உள்ளது. அதை தினமும் நடந்து சென்று வாங்கி வரவேண்டும்."
யார் அந்த முக்கிய பிரமுகர் தெரியுமா?
நமது தேசத் தந்தை மகாத்மா காந்திதான்!!!
தினமும் வாக்கிங் (Walking), ஜாக்கிங்(jogging), (Running)ஓட்டம், ஜிம்(Jimnastics), yoga(யோகாசனம்) போன்ற ஏதாவது ஒரு மனத்திற்கு பிடித்தமான உடற்பயிற்சியை அனுதினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் செய்து வரவேண்டும்
தினமும் உடல்நலத்திற்கு உடற்பயிற்சியும், மனோ பலத்திற்கு தியானமும் செய்து வந்தால், உடலும், மனமும் எப்போதும் புதியதாக (body Fresh)வும், ஆரோக்கியமாகவும், மனத்தில் தன்னம்பிக்கையும் நிச்சயம் ஏற்படும்.
இந்தப் பழக்கமானது நமது பல நோய்களை வராமலேயே செய்துவிடும் சக்தி கொண்டது. உடலில் இருக்கும் நோய்களையும் கூட இவை நீக்கி விடும் வல்லமைப்படைத்தவை அல்லது ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளாவது நோயை வைத்திருக்கும்.
வெற்றிப் பெற துடிக்கும் உங்களுக்கு உடல்நலமும், மனோபலமும்தான் ஆதாரமாக இருந்து, எந்த செயலையும், ஏற்கும் மனோபலத்தையும்(Fortitude), துணிந்து செயலாற்றும் உடல்வலிமையும் (தினசரி செய்யும் உடற்பயிற்சியும், தியானமும்) தவறாமல் கொடுக்கும்.
எனவே உங்களது அன்றாட வாழ்வில் காலைக் கடன்களைப் போன்று, இவை இரண்டையும் காலைக் கடமைகளாக செய்து வந்தால் வெற்றி நிச்சயம் உங்களை நோக்கி நடைபோடும்..!! நன்றி நண்பர்களே..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக