அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
29 டிசம்பர், 2012
ஓர் வபாத் செய்தி
கொள்ளுமேடு ....நமதூர் M.I. இக்பால் மனைவியும் ,மர்ஹும் முஹம்மத் கவுஸின் மகளும் ,என் நண்பன் ஹசன் பாருக்கின் சகோதரியுமான செல்லகனி என்கின்ற சலிமா அவர்கள் இன்று மாலை சவுதியில் தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
27 டிசம்பர், 2012
நற்செயல்களை விரைந்து செய்க!
நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிறுத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான்.
உடல் நலம் பேண 100 குறிப்புகள்
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
23 டிசம்பர், 2012
ஏழை நாடான சோமாலியாவை விட ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் குஜராத்தில் தான் அதிகம்: மார்க்கண்டேய கட்ஜு
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், மார்கண்டேய கட்ஜு, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்தார். போபாலில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
குஜராத் மாநிலம் முன்னேறி விட்டதாக நரேந்திரமோடி கூறிவருகின்றார். இந்த முன்னேற்றம் சராசரி மனிதனின் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் உதவிடவில்லை.
18 டிசம்பர், 2012
பள்ளி வளாகத்திற்கு சுற்று சுவர்: இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
பிரப்பன்வலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாததால் ஆடு,மாடு போன்ற விலங்குகள் கூடும் இடமாக பள்ளி வளாகம் இருந்தது.எனவே சுற்று சுவர் கேட்டு சட்டமன்றஉறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இக்கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சுற்று சுவர் கட்டுவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்.2012-2013 நிதியாண்டு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டி முடிக்கப் பட்ட சுற்று சுவரை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி கூறிக் கொண்டனர்.
டெங்கு காய்ச்சல் 100 சதவிகிதம் ஒழிக்கப்பட்ட மாவட்டம்!
காரைக்கால்: "மாவட்ட நலவழித்துறையின் தீவிர முயற்சியால், காரைக்காலில், டெங்கு காய்ச்சல் 99 சதவிகிதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது" என நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, காரைக்கால் மாவட்ட நலவழித்துறையின் துணை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி கூறியதாவது:
"அண்டை மாநிலங்களில் டெங்கு வேகமாக பரவி வந்தபோது, காரைக்காலிலும் அதன் தாக்கம் இருந்தது. இதனால் டெங்கு
அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மட்டுமே தகுதியானவர்: அரசு அறிவிப்பு
2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க உள்ளவர்கள் விண்ணப்பத்தின்போது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில்:
2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே பாஸ்போர்ட்டு பெற்றுள்ளவர்கள் (குழந்தைகள் உட்பட), அவரவர்களுடைய பாஸ்போர்ட்டுகளின் செல்லுபடியாகக் கூடிய காலத்தை சரிபார்த்து, செல்லுபடியாகும் காலம் 31.03.2014 வரை இல்லையென்றால் அந்த பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பாஸ்போர்ட்டில் விசா பதிவிற்காக குறைந்த பட்சம் அருகருகே 2 பக்கங்கள் காலியாக இருக்குமாறு உறுதி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஹஜ் 2013-க்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கவிருக்கும் மனுதாரர்கள் ஐஎப்சி குறியீடு உள்ள வங்கிகளில், புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்குமாறும், அவ்வாறு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதற்கு சான்றாக காசோலை ஒன்றினை (இரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே பாஸ்போர்ட்டு பெற்றுள்ளவர்கள் (குழந்தைகள் உட்பட), அவரவர்களுடைய பாஸ்போர்ட்டுகளின் செல்லுபடியாகக் கூடிய காலத்தை சரிபார்த்து, செல்லுபடியாகும் காலம் 31.03.2014 வரை இல்லையென்றால் அந்த பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பாஸ்போர்ட்டில் விசா பதிவிற்காக குறைந்த பட்சம் அருகருகே 2 பக்கங்கள் காலியாக இருக்குமாறு உறுதி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஹஜ் 2013-க்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கவிருக்கும் மனுதாரர்கள் ஐஎப்சி குறியீடு உள்ள வங்கிகளில், புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்குமாறும், அவ்வாறு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதற்கு சான்றாக காசோலை ஒன்றினை (இரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க உள்ளவர்கள் விண்ணப்பத்தின்போது பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில்:
2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
08 டிசம்பர், 2012
காட்டுமன்னார்கோவில் ஆயங்குடியில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
காட்டுமன்னார்கோவில் அருகே மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார் கோவில் பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது நடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற இன்னும் 2 மாதத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
02 டிசம்பர், 2012
இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker-ன் பரபரப்பான வாக்குமூலம்
நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker-ன் பரபரப்பான வாக்குமூலம்
[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.
01 டிசம்பர், 2012
லால்பேட்டையில் 144 தடை உத்தரவு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை அருகே உள்ள இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …
ரம்ஜான் தைக்கால் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே மது குடித்துக்கொண்டிருந்தனர், இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்டித்தனர், இதனால் இருதயபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோபம் அடைந்து ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம், சலீம் ஆகியோரைத் கடுமையாக தாக்கி சலீமின் டீக்கடையையும் அவர்கள் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்,இதைத்தொடர்ந்து தைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இருதயபுரத்திற்குத் திரண்டு சென்றனர், தகவல் அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்,
29 நவம்பர், 2012
இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்................!!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!
2030-ல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது
2030-ல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது
என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறித்து பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது,
மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்தவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது,
மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்தவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது,
28 நவம்பர், 2012
இஸ்லாமிய விரோத காட்சிகளை நீக்க உதவி செய்த முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நன்றி!
சமீபத்தில் வெளியான தூப்பாக்கி எனும் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவரவாதிகளாக சித்தரித்தது குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியது. இக்காட்சிகளை நீக்க கோரி இப்படக்குழுவினரை இதஜ, தமுமுக, தேசியலீக், SDPI உள்ளிட்ட 24 அமைப்புகள் கூட்டாக சேர்ந்து சந்தித்தது. அதன் அடிப்படையில் இக்குழுவினர் இஸ்லாமிய சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டனர். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி விடுவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
27 நவம்பர், 2012
தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து - பெண்களைக் கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட்
மும்பை: மறைந்த பால் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காவும் இரு இளம் பெண்களைக் கைது செய்த மகாராஷ்டிர காவல்துறையினர் மீது மும்பை உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சிவசேனா கட்சியினரை ஜஸ்ட் 7500 ஜாமீனில் வெளியே விட உத்தரவிட்ட மாவட்ட நீதிபதியையும் தூக்கியடிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
26 நவம்பர், 2012
நானுற்றி இருபது (420) ஆண்டு பாரம்பரியத்தை சிதைக்கும் மதவெறி அமைப்புகள்....!!
60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப்பட்ட சார்மினார். சார்மினார் அருகில் கட்டப்பட்டுள்ள பிரச்சனைக்குரிய சிறிய கோவில். நன்றி : ‘தி இந்து’ (நவ. 21)
420 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சார்மினாரின் பாரம்பரியத்தை சிதைக்கும் விதமாக அதன் அருகிலேயே இந்துக்கோவில் கட்டப்பட்டிருப்பது குறித்தும், அதனால் ஏற்படும் சர்ச்சை குறித்தும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 4 கூம்பு கோபுரங்களை கொண்ட சார்மினார் கட்டுமானத்திற்கு அருகே, மிகச்சிறிய அளவிலான பாக்யலட்சுமி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில், பழமை வாய்ந்தது என்று இந்து அமைப்புகள் கூறினாலும், 60 ஆண்டுகளுக்கு
21 நவம்பர், 2012
கமல் உடல்நிலை... மீடியா கிளப்பிய பரபரப்பு!!
விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மீடியாவில் வெளியான செய்திகள் அவரது ரசிகர்களுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்பங்களோடு "விஸ்வரூபம்' படத்தை இயக்கி தயாரித்து, நடித்து பிரமாண்ட படைப்பாக உருவாக்கியுள்ளார் கமல்.
20 நவம்பர், 2012
குறிவைக்கப்படும் "ஜம்யியத்துல் உலமா" : குல்சார் ஆசமி குற்றச்சாட்டு!
மும்பைபோலீஸ், முஸ்லிம் இயக்கங்களை குறிவைத்து கண்காணிப்பதாகவும், குறிப்பாக "ஜம்யியத்துல் உலமா ஹிந்த்" அமைப்பு குறித்து, துருவித்துருவி விசாரித்து வருவதாகவும் வேதனைதெரிவித்தார், மாநில சட்டத்துறை செயலாளர் குல்சார் ஆசமி.
நேற்று (19/11) ஜம்யியத்தின் "இமாம் பாடா" அலுவலகத்துக்கு வந்த, முஸ்லிம் பிரிவை கவனிக்கும் ("M"பிரான்ச்) போலீசார் இருவர், தன்னிடம் ஜம்யியத் தலைவர்கள் குறித்து சரமாரி கேள்விகள் கேட்டதாக தெரிவித்தார்.
மும்பை : பால் தாக்கரே பாதையில் பயணிக்கும் "பாசிச" போலீஸ்!
மும்பை ரவுடி பால் தாக்கரே மரணத்தையொட்டி, 2 நாட்களாக நடத்தப்பட்ட கடையடுப்புக்கள், பால் தாக்கரே மீதான மரியாதையால் அல்ல, சிவசேனை ரவுடிகளின் பயத்தினால் தான் என்று, "ஃபேஸ் புக்"கில் கருத்து பகிர்ந்துக்கொண்டதால் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பையை சேர்ந்த 21வயது இளம்பெண் (சிங்கம்) "ஷாஹீன்" என்பவர், தெரிவித்திருந்த கருத்துக்கு "ரேணு" என்ற இன்னொரு இளம்பெண் "Like" கொடுத்த பாவத்துக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.
19 நவம்பர், 2012
பந்த்தை எதிர்த்து கருத்து சொன்னா அரெஸ்டா?- பாசிஸ்ட் சர்வாதிகார ஆட்சி நடக்குற நாடா?: கொந்தளித்த கட்ஜூ
மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மறைவையொட்டி மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டதை விமர்சித்த பெண்ணை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்ததற்கு பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்த பெண்ணை விடுதலை செய்வதுடன் அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
14 நவம்பர், 2012
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 100 அடி நீளம் கொண்ட கார்ர்ர்...!!
100 அடி நீளம் கொண்ட சொகுசு கார் கின்னஸில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. இந்த சொகுசு காரை கலிபோர்னியாவை சேர்ந்த ஜே ஓபெர்க் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
பார்ப்பதற்கு ரயில் போல இருக்கும் இந்த நீளமான
13 நவம்பர், 2012
ஓர் வபாத் செய்தி
கொள்ளுமேடு ....நமதூர் மேலத்தெருவிலிருக்கும் அஷ்ரப் அலி ,மற்றும் என் நண்பர் ஹலிபுல்லாஹ் இவர்களின் தாயாரும் எங்கள் ஊரின்பெண்கள் மதரஸாவின் நீண்ட காலம் தலைமை ஆசிரியர்மான ஹஸீனா பூ அவர்கள் இன்று அதிகாலை தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
12 நவம்பர், 2012
துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு கண்டனம்
முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.
அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,
பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி
தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி போன்ற ஊடகங்களே தவிர்த்தவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களின் குணாதிசியங்களையும், பண்புகளையும் அதிகமாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள நாட்டில் அமர்ந்துக் கொண்டு செய்தியின் தரம் அறியாமல் வாசிப்பது தவறு என ரேடியோ ஹலோ உணரவேண்டும்.
09 நவம்பர், 2012
ராமன் மோசமான கணவன், லஷ்மணன் மோசமான தம்பி : ராம் ஜெத்மலானி
புது தில்லி : ராமர் கோவில் விவகாரத்தை வைத்தே ஆட்சியை பிடித்த பி.ஜே.பியினருக்கு சங்கடத்தை உண்டாக்கும் வகையில் பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் – பெண் உறவு குறித்த புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பேசிய ராம் ஜெத்மலானி “ ராமனை எனக்கு பிடிக்காது. அவன் மோசமான கணவன். யாரோ சில மீனவர்கள் சொன்னதற்காக அபலை பெண்ணான சீதையை காட்டுக்கு அனுப்பி விட்டான்” என்று சொன்னார்.
கமல்ஹாசனுக்கு த.மு.மு.க கோரிக்கை!
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம்' திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தை தங்கள் அமைப்பிற்கு காண்பித்த பிறகே வெளியிட வேண்டும் என த.மு.மு.க கட்சியின் தலைவர் ஜே.எஸ் ரிபாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
07 நவம்பர், 2012
01 நவம்பர், 2012
மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
அ.தி.மு.க, இந்திய தரகு முதலாளிகள், காங்கிரஸ், சிறு தொழில்கள், தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், தி.மு.க, பன்னாட்டு நிறுவனங்கள், புதிய ஜனநாயகம், விவசாயிகள்
மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்
கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் என்ன? தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டுக்கே ஆற்காடு வீராசாமியின் பெயரைச் சூட்டி, ஒரு அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதுபோல பிரச்சினையைச் சுருக்கி சித்தரித்தன ஊடகங்கள். மின்வெட்டு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, “ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின் பற்றாக்குறையைப் போக்குவேன்” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தார்.
''குழந்தை வளர்ப்பு -ஒரு இஸ்லாமிய பார்வை''
அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்....
நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்... அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவதுநல் ஒழுக்கமுள்ள மனைவியை.....
பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும் மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.
28 அக்டோபர், 2012
பக்ரீத் பண்டிகை கொண்டாடிய 107 வயது மூதாட்டி!
திருப்பூர், நல்லூர் சிறுநகர் காலனியில் 107 வயது பாட்டி ஜெஹராவியுடன், ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த குடும்பத்தினர். (உள்படம்: ஜெஹராவி பாட்டி).
திருப்பூரைச் சேர்ந்த 107 வயது பாட்டி ஜெஹராவி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை தனது 189 வாரிசுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர் எஸ்.ஆர். சையத் அப்துல் லத்தீப். இவரது மனைவி பூமா என்ற ஜெஹராவி (107). கடந்த 1951 ஆம் ஆண்டு குடும்பத்துடன் திருப்பூர் வந்த சையத் அப்துல் லத்தீப், ஜெஹராவி தம்பதி பனியன் நூல் பிரிக்கும் வேலை செய்து, குழந்தைகளை வளர்த்தனர். 40 ஆண்டுகளுக்கு முன் சையத் அப்துல் லத்தீப் இறந்து விட்டார். இப்போது, 107 வயதான ஜெஹராவி தன் வாரிசுகளின்
24 அக்டோபர், 2012
ஹஜ்ஜின் சிறப்புகள்
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது
22 அக்டோபர், 2012
குஜராத் - மோடியின் கனவு நனவாகுமா?
வளர்ச்சியின் நாயகன், அடுத்த பிரதமர் என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்தலைச் சந்திக்கத் தயாராய் உள்ளார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவாரா?
002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்குச் சில மாதங்களுக்குப் பின் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுள் பாரதீய ஜனதா கட்சி 127 தொகுதிகளைப் பெற்றது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் குஜராத் கலவரத்தின் தாக்கம் குறைந்திருந்தாலும்
நெய்வேலி- அனல் மின்நிலையம் முற்றுகை - 1500 பேர் கைது
21 அக்டோபர், 2012
கட்சி வேறுபாட்டை மறந்து அனைவரும் சிந்திக்க வேண்டும்: ஜெ. சொல்வது முறைதானா: கலைஞர் கேள்வி
சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் செழிப்பாக மாறும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம். சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப்பற்றி நான் 2 நாட்களுக்கு முன்பு கூட கடிதம் எழுதியிருந்தேன், திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா. பாண்டியனும், பா.ம.க. சார்பில் நிறுவனர் ராமதாசும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் சேவையுடன் சம்பாதிக்க ஆகாயவியல் துறை
பொறியியல் பாடங்களில் வித்தியாசமானதும் மாணவர்களுக்குப் புதிய பாதையைக் காட்டும் துறையுமான ஆகாயவியல் (Aerospace) பாடத்தை கன்னியாகுமாரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைகழகம் கற்றுத் தருகிறது. இது நான்காண்டு படிப்பாகும். 2009-ம் ஆண்டு இந்தத் துறை தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆகாயவியல் துறையின் உட்பிரிவுகளான விமானப் பகுதிகளை வடிவமைத்தல்,
09 அக்டோபர், 2012
ஊட்டி மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் நோக்கி இன்று ஒரு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. மலைப்பாதையில் பரலி அருகே வந்தபோது, பஸ்சின் அச்சு முறிந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.
இதனால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் பயணிகள் அலறினர். பின்னர் திடீரென அந்த பஸ்
சிதம்பரதில் ரூபாய் 2 கேட்டு தொழில் அதிபர் மகன் கடத்தல் தனிபடை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் முகமது யாஷின். இவருக்கு சிதம்பரத்தில் திருமண மண்டபம், வணிக வளாகங்கள் உள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மகன் முகமது பைசல் (வயது 20). இவர் திருச்சியில் ஜமால்முகமது கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். அங்கு விடுதியில் தங்கி இருந்த அவர் விடுமுறை நாட்களில் சிதம்பரம் வந்து செல்வார்.
07 அக்டோபர், 2012
அண்ணலாருக்கு எதிராக அவதூறா? - பொறியாளர் ஜக்கரிய்யா
அல்லாஹ்வின் திருப்பெயரால்.. ..
அண்ணலாருக்கு எதிராக அவதூறா?
- பொறியாளர் ஜக்கரிய்யா
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்ரும் நிலவட்டுமாக !
பேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம்.
அண்ணலாருக்கு எதிராக அவதூறா?
- பொறியாளர் ஜக்கரிய்யா
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்ரும் நிலவட்டுமாக !
பேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம்.
06 அக்டோபர், 2012
"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளல்லர்" குஜராத் காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் சூடு
"இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை" சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு (Act Now For Harmony and Democracy) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மகேஷ் பட், 'இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை' எனும் கருப்பொருளில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது மேற்கண்டவாறு வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். மேலும், "இதுபோன்ற பாரபட்சமான மனப்பான்மைக்கெதிரான (anti-discrimination law) சட்டம் இயற்றப்பட வேண்டியது உடனடியான தேவையாகும்" என்றும் கூறினார்.
05 அக்டோபர், 2012
முஸ்லிம்லீக் விழாவில் கருணாநிதி பேச்சு! இப்படியே பேசி முஸ்லிம்களின் தலையில் 25 வருடம் மிலகாய் அரைத்தது போதும்
"மதவாத சக்திகளுக்கு இடம் தரமாட்டோம்" என்று முஸ்லிம் லீக் பத்திரிக்கையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசினார்.
இந்திய யூனியம் முஸ்லிம் லீக் கட்சியின் நாளேடான 'மணிச்சுடரின் வெள்ளிவிழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்புரை ஆற்றிய கருணாநிதி "பாரதீய ஜனதாவுடன் கூட்டணி உறவு கொண்ட போது கூட தி.நகரில் நடந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், கருணாநிதி இருக்குமிடத்தில் மதவாத சக்தி நிச்சயம் தலை காட்டாது என்றார். அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் திமுக கடைசி வரை இருந்தது. அந்த நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படும் நிலை வந்ததும் உறவை அறுத்துக் கொண்டு வெளியே வந்தவன் கருணாநிதி. இந்தியாவை, தமிழ்நாட்டை பொறுத்த வரை மதவாத சக்திகளுக்கு நிச்சயமாக இடம் தரமாட்டோம் என்ற உறுதியை இங்கே தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.
முஸ்லிம் லீக் கட்சி நாளேட்டுக்கு இன்று வெள்ளிவிழா : கருணாநிதி சிறப்புரை m
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாளேடாக மணிச்சுடர் என்ற பத்திரிக்கை தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பத்திரிக்கையின் வெள்ளிவிழா இன்று மாலை 05 மணிக்கு பெரியார் திடலில் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பேரா. காதர்மொஹிதீன் தலைமை வகிக்கும் விழாவில், முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் எம்.பி எம். அப்துல்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.
22 செப்டம்பர், 2012
கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகள்..!
நீங்கள் கணினியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிபவரா? உங்கள் கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.
ஆயர்வேத மருத்துவ அடிப்படைத் தகவல்(Ayarveta Medical Basic Information) என்ன சொல்கிறதெனில், மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (Land, water, fire, air, space) என ஐம்பூதங்கள்.
ஆயர்வேத மருத்துவ அடிப்படைத் தகவல்(Ayarveta Medical Basic Information) என்ன சொல்கிறதெனில், மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (Land, water, fire, air, space) என ஐம்பூதங்கள்.
செல்போனால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா? (Cell phone causing the hard of hearing)
நண்பர்களே..
செல்போன் பயன்படுத்துவதால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா?
உறுதியாக செவிட்டுத் தன்மை ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாக நாம் கேட்கும் திறனின் அளவு 70 டெசிபல் முதல் 75 டெசிபல் வரைதான். இதற்கு அதிகமாக ஒலியின் அளவு ஆகும்போது கேட்கும் திறனில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நுட்பான உறுப்புகளில் காதும் ஒன்று. காது கேட்கும் திறன் பாதிப்படையாமல் இருக்க சராசரி ஒலியின் அளவைவிட அதிகமாகும்போது குறைகிறது. அதிகபட்ச உயர்ந்த அளவு 90 டெசிபல் ஒலி அளவுகள் வரை கேட்கும் திறனைத் தாங்குகிறது காதுகள். இதற்கு மேல் அதிகரித்தால் காது "கேக்காது" ஆகவிடும்.
21 செப்டம்பர், 2012
பாகிஸ்தான் கூகிளிடம் அந்த விடியோவை தடை செய்ய கோரியும் இணங்காமல் இருந்ததை அடுத்து பாகிஸ்தான் அரசு யூடியூபை முற்றிலுமாக தடை செய்து விட்டது,
பாகிஸ்தான் கூகிளிடம் அந்த விடியோவை தடை செய்ய கோரியும் இணங்காமல் இருந்ததை அடுத்து பாகிஸ்தான் அரசு யூடியூபை முற்றிலுமாக தடை செய்து விட்டது, பாகிஸ்தானை தொடர்ந்து பங்களாதேஷும் யூடுயுபை முற்றிலுமாக தடை செய்து உள்ளது.
சவூதி அரசும் முற்றிலுமாக தடை செய்ய போவதாக எச்சரித்து உள்ளது.
சவூதி அரசும் முற்றிலுமாக தடை செய்ய போவதாக எச்சரித்து உள்ளது.
20 செப்டம்பர், 2012
அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் கட்டுமீறிய மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு!
அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு, நல்லிணக்கம் இவையெல்லாம் இஸ்லாம் போதிக்கும் நற்குணங்கள். அதேநேரம் உரிமை மீட்பு, சமூக நீதி, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் போராடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அநீதிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக சக்திக்கேற்ப எதிர்ப்பது முஸ்லிம்களின் கடமையாகும் என கூறப்படுகிறது.
யுத்தம் என்பது பல வகைப்படும். அது தமிழில் வன்முறை, கலகம், தாக்குதல், புரட்சி என பல உள் அர்த்தங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
19 செப்டம்பர், 2012
வீட்டுக்குள்ளே இருந்தாலும் கவனமா இருங்க பெண்களே!
மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர். இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை. நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.
17 செப்டம்பர், 2012
சவூதியில் பயங்கர விபத்து - 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி
ஜூபைல்: சவூதி அரேபியாவின் ஜூபைல் என்ற நகரில் இன்று நடந்த மோசமான சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூபைல் நகரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இந்தியர்கள், நேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்நதவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்: மேலும் ஒரு நடிகை குமுறல்
வாஷிங்டன்: இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரான படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட படம் இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ். இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலிபோர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா. அவர் போதை மருந்து வியாபாரம் செய்து சிறைக்கு சென்று வந்தவர். அவரின் படத்தை எதிர்த்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)