#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

03 மார்ச், 2011

அரசியல் சூழ்ச்சிகளை முறியடிப்போம்

இஸ்லாம் என்பது உலக நடைமுறை நெறியாகும். இஸ்லாம் மனித வாழ்வின் இலக்காக அல்லாஹ்வின் பொருத்தத்தையும் சொர்க்க வெற்றியையும் நிர்ணயித்த போதிலும் அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பை இவ்வுலகில் காண நினைக்கிறது. எனவே இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு இணங்க, இவ்வுலக வாழ்வை தூய்மையானதாக ஆக்கிக் கொள்வது ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாகும்.

தன்னை சீர்திருத்துவது மட்டுமின்றி தான் வாழும் உலகை
நெறிமுறைப்படுத்துவதும் தூய்மையாக்குவதும் நீதிமிக்க அரசை நிலை நாட்டுவதும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டமார்க்கக் கடமையாகும். மனித இனத்தை விட்டும் விலகி, காடுகளிலும் மலைகளிலும் குடில் அமைத்து மேற்கொள்ளும் துறவரம்தான் ஆன்மீகத்தின் அடையாளம் என்று கருதும் சித்தாந்தத்தை அடியோடு அப்புறப்படுத்தியது இஸ்லாம்.

இஸ்லாத்தில் துறவரமில்லை என்று பிரகடனப்படுத்தி, சுமார் 10 வருட காலம் நீதி நெறிமிக்க ஆட்சித் தலைவராக இருந்தவர்கள் நம் ஆன்மீகத் தலைவர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அல்குர்ஆனின் நூற்றுக்கணக்கான வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பத்து வருட மதீனா வாழ்க்கையும் முஸ்லிம்களின் அரசியல் புரட்சிக்கு வழிகாட்டுகின்றன.

அல்ஃபத்ஹு (வெற்றி) அத்தியாயமும் அந்நஸ்ர் (உதவி) அத்தியாயமும் நபி (ஸல்) அவர்களின் 23 வருட காலகட்ட அழைப்புப்பணி மற்றும் அரசியல் புரட்சியின் பிரதி பலனாய் அமைந்திருப்பதை உணர முடிகிறது. ஆட்சித் தலைமைத்துவத்தைப் பற்றியும் ஆட்சியாளர் மற்றும் ஆளுமைக்குட்பட்டோரின் சட்டங்கள் பற்றியும் ஏராளமான நபிமொழிகள் அனைத்து ஹதீஸ் நூல்களிலும் தனித்தலைப்பாக இடம் பெற்றுள்ளன.

அவளிடம் ‘’இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!”” என்று சொல்லப்பட்டது அப்போது அவள்(அம்மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர் தடாகம் என்று எண்ணிவிட்டாள்எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), ‘’அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!”” என்று கூறினார். (அதற்கு அவள்) ‘’இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம்

செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்”” எனக் கூறினாள்.
(அல்குர்ஆன் 27:44)

ஸபா பகுதியில் ஆட்சி புரிந்து வந்த ராணி, நபி சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சிக் கோட்டைக்குள் நுழைந்த சம்பவம்தான் இது. இவைகளெல்லாம் இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி கூறினாலும், முஸ்லிம்கள் தம்மால் முடிந்தவரை நீதி நெறிகளை நிலைநாட்டுவதும் அநீதிக்கு ஏதிராக போராடுவதும் மார்க்க கடமையாகும்.

பதவிக்காக மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல், ஆட்சிக் கோட்டைகளை வெல்வதோ, அதில் பிரதிநிதித்துவம் பெறுவதோ இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக்கைகக்கு எதிரானதல்ல. அநீத ஆட்சியாளருக்கு முன்னர் நீதமான வார்த்தை கூறுவதுதான் சிறந்த ஜிஹாத் (அறப்போர்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூற்கள்: திர்மிதீ, அபூதாவூத்)

பலரை திரட்டிக் கொண்டு ரோட்டில் இடும் முழக்கத்தை விட, மக்கள்பிரதிநிதியாக சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ இருந்துவரும் ஒருவரின் குரல் மிகவும் வலிமை மிக்கது என்பதை நாம் அறிவோம்.

அதனுள் நுழைவதற்காக கடக்க வேண்டிய பாதை கரடு முரடாக இருக்கலாம். பல சாக்கடைகளை கடக்கவும் நேரிடலாம். ஆனால் அங்கேதான் இந்திய முஸ்லிம்களின் மார்க்கச் சுதந்திரமும் சட்டரீதியான வாழ்வாதாரமும் தீர்மானிக்கப்படுகிறது என்பதை இந்திய முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. முஸ்லிம்களின் ஓட்டு வங்கியின் பலத்தை முஸ்லிம்கள் உணர்ந்தார்களோ இல்லையோ, அதனை அரசியல் கட்சியினரும் இஸ்லாத்தின் எதிரிகளும் நன்கு உணர்ந்து நூற்றாண்டுகள் கடந்து விட்டன.

முஸ்லிம் தலைமைத்துவத்தை பிரித்தாண்டார்கள். முஸ்லிம்களின் பெரும்பான்மையை தவிர்ப்பதற்காக தொகுதிப் பங்கீட்டில் முஸ்லிம்களை பிரித்தாளும் சூழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள். நாடாளு மன்றத்திலோ, சட்ட மன்றத்திலோ முஸ்லிம்களை அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப நுழையவிடக்கூடாது என்ற பொதுத் திட்டத்தில் உடன்பட்ட அரசியல் கட்சியினர் முஸ்லிம்களையே முஸ்லிம்களுக்கு ஏதிராக மோதவிட்டனர்.

தோழமைக் கட்சியினர் முஸ்லிம் தொகுதியில் முஸ்லிம் அல்லாதோரை நிறுத்தி அவர்களுக்காக முஸ்லிம்களை உழைக்க வைத்தனர். இவ்வாறு அரசியல் கலத்தில் முஸ்லிம் சமுதாயம் எதிர் கொள்ளும் சோதனைகள் ஏராளம். இவைகளுக்கிடையே தமிழக மேதாவி(?) ஒருவர் ஒரு இஸ்லாமிய கட்சியை தோற்கடிப்பதுதான் எங்கள் இலட்சியம் என்று புலம்பி, தன்னை முஸ்லிம் சமூக துரோகி என்று மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்.

முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முஸ்லிம்கள் அடையாளம் காண வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு தாரைவார்க்கும் நயவஞ்சகர்களின் வலையில் சிக்கிவிடாமல் முஸ்லிம்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டும். இந்தியத் திருநாட்டில் நீதி நெறிமிக்க ஆட்சியை நிலைநாட்ட உறுதியாக ஆன்மீக சிந்தனையுள்ள உங்களால் மட்டுமே முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிதறிக் கிடந்த குறுநில மன்னர்களை அகற்றி, அகண்ட பாரதத்தை உருவாக்கியவர்களே நீங்கள்தான். 800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் என்ற சிறப்பு இந்திய வரலாற்றிலேயே உங்களுக்கு மட்டும்தான். பின்தோன்றிய தேச துரோகிகள் இந்தியாவில் முஸ்லிம்களின் பெரும்பான்மைக்கு அஞ்சி, நாட்டையே துண்டாடினர்.

2020ல் வல்லரசாக மாறும் கனவு கண்டுகொண்டிருக்கும் போது, அதற்கு முன்னரே இனவாத, மொழிவாத அரசியல் இந்தியாவை கூறுபோட்டுவிடுமோ என்ற அச்சமும் மறுப்பதற்கில்லை. மத, இன, மொழி வாதங்களைக் கடந்து இந்திய எல்லைக் கோடுகளையும் அதனுள் வாழும் மக்களையும் நாட்டின் வளங்களையும் பாதுகாப்பது இந்தியர்களின் கூட்டுப் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பில் முஸ்லிம்களுக்கும் பெரும்பங்குண்டு.

உங்கள் கையில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டும் இந்தியர்களின் நலனை தீர்மானிக்கும் மகத்தான ஆயுதம் என்பதாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதை கவனத்தில் கொண்டும் தங்களின் ஓட்டுகளை மிகச் சரியான நபருக்குச் செலுத்தி நாடு சிறக்க வழிவகுக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

உங்களில் எவர் ஈமான் கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தை அமைதியைக் கொண்டு மாற்றிவிடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;. ‘’அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;”” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்;! ஜகாத்தைக் கொடுங்கள்;! (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்! நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும். (அல்குர்ஆன் 24:55-57)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக