#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

20 மார்ச், 2011

அ.தி.மு.க.,வுடன் கொள்கை கூட்டணி இல்லை:த.மு.மு.க., மாநில செயலர் அறிவிப்பு

ஊட்டி:""அ.தி.மு.க.,வுடன், தேர்தல் கூட்டணி மட்டுமே; கொள்கை கூட்டணி இல்லை,'' என, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலர் கூறினார்.த.மு.மு.க., மாநில செயலர் உமர் ஹாஜி, ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:அ.தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சி, ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கத்தில் போட்டியிடுகிறது.
இந்த தொகுதிகள் மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற, கட்சித் தொண்டர்கள் பாடுபடுவர். தி.மு.க., ஆட்சியால், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரசாரம் செய்வோம்.அ.தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி, சிறிது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது; கூட்டணியில், ம.தி.மு.க., இடம் பெறாதது துரதிஷ்டவசமானது. முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்; அமல்படுத்துவதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஏராளமான இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; இத்திட்டங்கள், மனிதனை சோம்பேறியாக்கி விடும்; மேலும், கடத்தலுக்கு வழிவகுக்கும். இலவச திட்டங்களால், தமிழகத்தின் கடன், ஒரு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., உடனான கூட்டணி, தேர்தல் கூட்டணி மட்டுமே; கொள்கை கூட்டணியில்லை.இவ்வாறு, உமர் ஹாஜி கூறினார்.

    நன்றி.தினமலர்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக