
புதுடில்லி:முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜுன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 81.நெஞ்சு வலி மற்றும் மூளை நரம்பியல் பிரச்னைகள் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த அர்ஜுன் சிங்கிற்கு, நேற்று மாலை5.30 மணியளவில், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து, மாலை 6.15 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அர்ஜுன் சிங்கிற்கு சரோஜ் தேவி என்ற மனைவியும், அஜய் சிங் மற்றும் அபிமன்யு என்ற இரு மகன்களும், வீணா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அஜய் சிங், மத்திய பிரதேச எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.அர்ஜுன் சிங் 1957ல் ம.பி., மாநிலத்திலிருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972ல் கல்வி அமைச்சரானார்; 1980ல் அம்மாநில முதல்வரானார். வக்கீலான இவர், சிறந்த அரசியல்வாதி. 1985ல் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 1988ல் முதல்வரானார். 1991ல், மத்திய மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக