#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

10 மார்ச், 2011

.தினமலரின் நேர்காணல்

 
ஜவாஹிருல்லா தலைவர், மனிதநேய மக்கள் கட்சி:தி.மு.க.,வை முஸ்லிம்கள் ஆதரிப்பது ஒரு மாயை""இஸ்லாமியர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை. தற்போது கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கி, ஒரு தொகுதியை பிடுங்கிவிட்டார் கருணாநிதி!'மற்ற முஸ்லிம் கட்சிகள் தி.மு.க.,வை ஆதரிக்கும் போது நீங்கள் மட்டும் இதில் மாறுபட்டது ஏன்?இது தவறான கருத்து. மக்கள் ஆதரவு உள்ள பல முஸ்லிம் அமைப்புகள், ஜமாத்துக்கள், அ.தி.மு.க.,வை தான் ஆதரிக்கின்றன. சிறுபான்மை அணியை சேர்ந்த சில, "லெட்டர் பேடு' அமைப்புக்களை அறிவாலயத்திற்கு அழைத்து, துணை முதல்வருக்கு மாலை, சால்வை அணிவித்து, போட்டோ எடுத்துக் கொண்டு, முஸ்லிம்கள் தி.மு.க.,வை ஆதரிப்பதாக ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கையை தி.மு.க.,............
நிறைவேற்றியதில்லை. தி.மு.க., அரசில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கூடுதல் "சீட்'டுக்காக தான் நீங்கள் அ.தி.மு.க., அணிக்கு வந்ததாக கூறுகிறார்களே?அப்படி இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., எங்களுக்கு ஒரு "சீட்' தர முன்வந்தது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட சொன்னார்கள். நாங்கள், சொந்த சின்னத்தில் நிற்க விரும்பினோம். மேலும், நாங்கள் கேட்ட தொகுதியும் கிடைக்கவில்லை. இதனால் தான் தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகினோம்.
அ.தி.மு.க., கூட்டணியில் உங்கள் கோரிக்கை நிறைவேறியதா?முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மையை அ.தி.மு.க., எப்போதும் பறித்தது கிடையாது. 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட அப்துல் லத்தீப், பஸ் சின்னத்திலும், கடந்த தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட தாவூத் மியாகான், வாழைப்பழம் சின்னத்திலும் போட்டியிட அ.தி.மு.க., ஒப்புக்கொண்டது. தற்போதும், எங்களுக்கு ஒதுக்கியுள்ள மூன்று தொகுதிகளிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடவும் ஒப்புக்கொண்டுள்ளது.
தி.மு.க., குறித்து உங்கள் நிலைப்பாடு தான் என்ன?தி.மு.க., ஓர் இமாலய ஊழல் கட்சி. அங்கு மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அதிகார துஷ்பிரயோகம் உள்ளது. இஸ்லாமியர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. தற்போது கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கினர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ள அவர்கள் மூவருமே, தி.மு.க., உறுப்பினர்களாக தான் இருப்பர். இந்நிலையில், காங்கிரசுக்காக, முஸ்லிம் லீக்கில் இருந்து ஒரு தொகுதியைப் பிடுங்கிக் கொடுத்து விட்டார் கருணாநிதி.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?முஸ்லிம்களுக்கு தற்போதுள்ள 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். 3.5 சதவீதம் ஒதுக்கீட்டிலும் சில சிக்கல்கள் உள்ளன. இந்த ஒதுக்கீடு அடிப்படையிலும் உரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் அரசு பணியில் சேர முடியவில்லை. 1991ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான மானியத்தை மீண்டும் வழங்கவும், தமிழகத்தில் துவக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களில், எங்களது உரிமையை, வேலை உத்தரவாதத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைப்போம்.
ஐந்து ஆண்டு கால தி.மு.க., அரசின் செயல்பாடுகள் குறித்து?இவ்வளவு காலமாக குறைக்காத பெட்ரோல் விற்பனை வரியை தேர்தலுக்காக குறைந்த அளவில் குறைந்துள்ளார். விலைவாசியால் மக்கள் வெறுப்பைப் பெற்றுள்ள ஓர் ஆட்சியாகவே தி.மு.க., ஆட்சி விளங்குகிறது. இந்த அரசின் கலைஞர் காப்பீட்டு திட்டத்தால், "கார்ப்பரேட்' மருத்துவமனைகள் தான் அதிகம் பயனடைந்துள்ளன. இன்னமும் மின்வெட்டு உள்ளது.
உங்களின் பிரசார வியூகம் என்ன?மனிதநேய மக்கள் கட்சி சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. தேர்தலில் பணத்தை முதலீடு செய்து வெற்றியை அறுவடை செய்யும் அரசியலுக்கு, ஒரு மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட கட்சி இது. தி.மு.க., கூட்டணி பணத்தை கொடுத்து வெற்றி பெற நினைக்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 55 சதவீதம் மக்கள் தி.மு.க.,வுக்கு எதிராக தான் ஓட்டு போட்டனர். எதிர்க்கட்சி ஓட்டுகள் சிதறலால் தி.மு.க., வெற்றி பெற்றது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அது நடக்கும்.முஸ்லிம்களின் அரசியல் தனித் தன்மையை அ.தி.மு.க., எப்போதும் பறித்தது கிடையாது.
காதர் மொய்தீன் மாநில தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்:தொண்டர்கள் மனதில் கஷ்டம்இருக்கவே செய்கிறது:""மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி இருக்க வேண்டும். தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் ஆட்சி தொடர வேண்டும். அப்போது தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். உரிமைகளை கேட்டுப் பெற முடியும்!''
கடந்த ஏழு ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்தாலும், கூட்டணியில் உங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கருதுகிறீர்களா?எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததால் தான், 2004 லோக்சபா தேர்தலில், வேலூர் தொகுதியில் போட்டியிட்டு நான் எம்.பி., ஆனேன். 2006 சட்டசபை தேர்தலில் வாணியம்பாடி, அரவக்குறிச்சி தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது மூன்று தொகுதிகள் வாங்கினோம். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி இருக்க வேண்டும். தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் ஆட்சி தொடர வேண்டும். அப்போது தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். உரிமைகளைக் கேட்டு பெற முடியும். சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உரிய மரியாதை கொடுக்கும் பாரம்பரியம், இரு கட்சிகளிடமும் தொடர்ந்து இருந்து வருகிறது. அதனால் தான் தி.மு.க., கூட்டணியில், நாங்கள் இருக்கிறோம். தி.மு.க., - காங்கிரஸ் உறவு முறியக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டணி முறியாமல் இருப்பதற்காக தேசிய தலைவர் அகமதுவை தொடர்பு கொண்டோம். பிரணாப் முகர்ஜி, குலாம்நபி ஆசாத், அகமது படேல் ஆகியோருடன், எங்கள் தேசிய தலைவர் அகமது பேச்சுவார்த்தை நடத்தினார். 63 சீட்டுகளை பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் குறியாக இருந்தது. கூட்டணி பாதிக்கக் கூடாது என்பதற்காக எங்களுக்கு கிடைத்த ஒரு தொகுதியை தியாகம் செய்தோம்.
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதே?அ.திமு.க., கூட்டணியில், அந்த கட்சியின் விருப்பப்படி சீட் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை சீட் கொடுப்பது என்பது முக்கியமல்ல; யார் எந்த கூட்டணியில் உள்ளனர் என்பது தான் முக்கியம். கூட்டணியில் உள்ளவர்கள் 234 தொகுதிகளையும் தங்கள் தொகுதியாக கருதுவது தான் கூட்டணியில் இருப்பதற்கு அழகு.
முஸ்லிம் கட்சிகளின் முதல் பிரதான கட்சியான உங்களுக்கு வெறும் இரண்டு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், உங்கள் கட்சிக்கு தொய்வு ஏற்பட்டுள்ளதா?நாங்கள் தான் ஒரு தொகுதியை தியாகம் செய்துள்ளோம். இந்த சரித்திர பூர்வமான சம்பவத்திற்கு, மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாவதற்காக இந்த தியாக முடிவை எடுத்துள்ளோம். தொண்டர்கள் மனதில் மனக்கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள், தொண்டர்களை சமாதானப்படுத்தி வருகிறோம்.
தொண்டர்களின் வருத்தம் என்னவாக இருக்கிறது?கட்சி நன்மைக்காக தான் தலைமை முடிவெடுக்கும். இதை கட்சி தொண்டர்கள் புரிந்து கொண்டு செயல்படுவர். மத்தியில், மாநிலத்தில் நல்லாட்சி தொடர்வதற்கு, சமுதாய மக்களும், தொண்டர்களும் இந்த தியாகம் பயன்பட்டதை நிச்சயமாக உணர்வர்.
தி.மு.க., ஆட்சியில் முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளதா?முஸ்லிம்களுக்கு தனி சிறுபான்மை அமைச்சகம் மத்தியில் இருப்பது போல், மாநிலத்தில், தனி சிறுபான்மை அமைச்சகம் தேவை என கேட்டோம். அதற்கு முன்னோடியாக தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், நாங்கள் கேட்டது நிறைவேறும்.முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என, காலங்காலமாக கேட்டு வந்தோம். மற்ற சமுதாய அமைப்புகளும் கேட்டு வந்தனர். சில சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதன் விளைவாக 3 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்தது. அவற்றை 5 சதவீதமாக உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி தரப்பட்டுள்ளது.
சுயநிதி பள்ளிக் கூடங்கள் 1992ம் ஆண்டு முதல், அரசு சார்பில் எந்த மானியமும் கிடைக்காமல் இருந்து வந்தது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் இல்லை. கோரிக்கை பலமுறை தொடர்ந்து வைத்திருந்தோம். அது நிறைவேற்றப்பட்டு, 1992ம் ஆண்டு முதல் இருந்து வரும் சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், பெரும்பான்மையினர் நடத்தி வரும் சுயநிதி பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு மானியமும், 6,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அரசு சம்பளமும் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எத்தனை சீட் கொடுப்பது என்பது முக்கியமல்ல; யார் எந்த கூட்டணியில் உள்ளனர் என்பது தான் முக்கியம்.

நன்றி.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக