சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அந்தக் கட்சி நேற்று அறிவித்தது."ராமநாதபுரம் தொகுதியில் ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ம.ம.க., துணை பொதுச்செயலர் தமீமுன் அன்சாரி, ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா போட்டியிடுவர்' என, த.மு.மு.க., பொதுச்செயலர் ஹைதர் அலி அறிவித்தார். பின், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு வயது 50, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்தவர்; சென்னையில் வசிக்கிறார். பி.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர்.
வட்டியில்லா வங்கி தொடர்பாக ஆய்வு செய்து சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். இந்திய சிறுபான்மை மக்கள் சார்பில் 2002ல் ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தவர். த.மு.மு.க., மற்றும் ம.ம.க., தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் ம.ம.க., சார்பில் போட்டியிட்டார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்கு வயது 34. நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ம.ம.க., மாநில துணை பொதுச் செயலராக உள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.ஆம்பூர் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவுக்கு வயது 42. ஆம்பூர் அருகே புதூர் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர். பி.ஏ., பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். ம.ம.க.,வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக