#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

27 மார்ச், 2011

இந்த இலவசங்கள் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா...

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ளன. பிற எந்த மாநிலத்தையும் விடவும், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தான் இலவசங்கள் பொங்கி வழிகின்றன. பிற மாநில அரசியல் கட்சிகள், தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கக்கூடும். 

தமிழகத்தை விட பின்தங்கிய மே.வங்காளத்தில் எந்த கட்சியும் தம் தேர்தல் அறிக்கையில் - "இலவசம்" குறித்து பேசவில்லை. வோட்டு போட தேர்தலுக்கு முந்தைய அன்பளிப்பை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியும். ஆனால் தேர்தலுக்கு பிறகு இலவசங்கள் என்கிற பெயரில் தரப்படும் லஞ்சத்தை தடுக்க ஏதேனும் சட்டங்கள் - எதிர்காலத்தில் வந்தால் நல்லது.

 வாக்காளர்களை பிச்சைகாரர்களாக்க துடிக்கும் கட்சிகளின் மீது கோபம் தான் வருகிறது. ஒருவன், யாரும் எதுவும் கேட்காமலே வாரி வாரி வழங்குகிறான் என்றால் மக்களை புது விதமாக அடிமைப்படுத்த முயல்கிறான் என்பதை உணர வேண்டும். கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்து விட்டு "கடையேழு வள்ளல்களை போல்" தங்களை காட்டிக் கொள்ள முயல்கிறார்கள்.

தங்கள் ஆட்சி காலத்தின் பலவீனங்களை, அடாவடிகளை, ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க ஆட்சியாளர்களுக்கு இலவச திட்டங்கள் தேவையாக உள்ளது. உண்மையாக மக்களுக்கு உழைத்திருந்தால் - இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் திணித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆட்சி, அதிகாரத்தை எப்பாடுபட்டாவது கைப்பற்றுவதில், தக்க வைப்பதில் குறியாக இருக்கிறார்கள். வேறென்ன சொல்ல.

இதில் இரண்டு கழகங்களுக்கும் மிக பெரிய வித்தியாசமில்லை. "நீ எட்டடி பாய்ஞ்சா நா பதினாறடி பாய்வேன்" என்பது போல் இலவச திட்டங்களை அள்ளி வீசுகிறார்கள்.

சுயமரியாதை நாயகர், பகுத்தறிவு செல்வர் கலைஞர் தான் சென்ற தேர்தலில் இந்த ட்ரண்டை கொண்டு வந்தார், தேர்தல் அறிக்கையாக இலவசங்களை வாரி இறைத்து நூலிழையில் தான் ஆட்சி அமைத்தார். விளைவு - அரசின் கடன் ஒரு லட்சம் கோடி. அதை பற்றி என்ன கவலை. ஆனாலும் என்ன... ஆட்சி, பதவி... ருசி கண்ட பூனைகள் - இந்த தேர்தலிலும் இலவசங்களை அறிக்கைகளாக வாரி இறைத்துள்ளது. மேற் கொண்டு வருமானத்துக்கு என்ன செய்வது. இன்னும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் டாஸ்மாக் கடைகள் திறந்து கொள்ளலாம்.




குடும்பத்தலைவர்களுக்கு டாஸ்மாக் சரக்கு. குடும்பத்தலைவிகளுக்கு கிரைண்டர், மிக்ஸி என்று அடுப்படி சரக்கு. கொடுப்பதை கொடுத்து விட்டால், இருபத்தி நான்கு மணி நேர மின்தடை வந்தால் கூட மக்கள் ஒரு நாளும் பொங்க மாட்டார்கள். அய்யாவுக்கு சற்றும் குறையாமல் அம்மாவும், தங்கள் தேர்தல் அறிக்கையில் - தி.மு.க அறிவிக்காத சில இலவசங்களை இணைத்து கொண்டுள்ளது. வேறு வழி இல்லை அம்மையாருக்கு.

அய்யா அறிவித்த இலவசங்களை போல் தான் அறிவிக்காவிட்டால் - மக்கள் தன்னை கை கழுவி விடுவார்களோ, வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தில் - அவரும் போட்டி போட்டு கொண்டு இலவசங்களை "காற்றாடி, மிக்ஸி, கிரைண்டர்" என்று அறிவித்திருக்கிறார். நிர்வாண உலகத்தில் - ஆடை உடுத்தியவன் முட்டாளாகி விடக்கூடாதில்லையா என்று ஜெ செயல்பட்டிருக்கிறார்.

இத்தனை காலமும் இலவசங்களை எதிர்த்த ராமதாசு, இப்போதும் எதிர்க்கிறார் - எப்படி என்றால், "ஜெயலலிதா அறிவித்த இலவச திட்டங்கள் சாத்தியமில்லை" என்று. மாமியார் உடைத்தால் மண் குடம்... மருமகள் உடைத்தால் பொன் குடம் என்கிற ரீதியில் பேசி இருக்கிறார். ஆனால் இலவசங்களை எதிர்க்கவில்லை. பெயரளவுக்கு அவரது கட்சி தேர்தல் அறிக்கையில் மது விலக்கு உள்ளது. சிகரெட் பெட்டியில், எவரும் படித்துவிடக்கூடாது என்பது போல் பொடி எழுத்துகளில் எழுதி இருப்பார்கள் "புகை பிடிப்பது உடல்நலத்துக்கு தீங்கானது" என்று.

அதை போல் தான் இலவச திட்டங்களுக்கு நடுவே, சம்பிரதாயபூர்வமாக மதுவிலக்கு கண்ணுக்கு தெரியாத பொடி எழுத்தில் உள்ளது. இவர்கள் என்ன ஆட்சியமைக்க போகிறார்களா... தனி தேர்தல் அறிக்கைக்கு.

 தி.மு.க ஆட்சியமைக்க நிபந்தனை அற்ற ஆதரவு என்பவர்கள் "மதுவிலக்கு" என்ற நிபந்தனை வைக்கலாமே. ஏதேனும் ஓரு பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் மீள்வது சிரமம். இலவசத்துக்கு ஏங்குவதும் மதுவை போன்ற ஒரு பழக்கமே என்கிறார்கள் மன நல ஆலோசகர்கள்.
 
    நன்றி. ஒசை   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக