
டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ் நாடு விரைவு ரயிலில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தீ பிடித்ததால் சுமார் 25 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் இச்சம்பவம் நடந்தது.
எஸ்-11 பெட்டியில் தீ பொறி ஏற்பட்டுள்ளதை அங்கிருந்த காவலாளி பார்த்து நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தவுடன், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. எனினும் அதிகாலை நேரமாதலால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் உடனடியாக வெளியேற முடியாமல் ரயில் பெட்டியிலேயே மாண்டனர். மேலும் தீ வேகமாக பரவியதால் கதவுகள் திறக்க முடியாமல் போனது. எனினும் தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.மேலும் சம்பவம் நெல்லூர் ரயில் நிலையம் அருகே நடந்ததால் தீ அணைப்பு படையினர் விரைவாக இடத்திற்கு செல்ல முடிந்தது என்றும் இதனால் தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எனினும் இறந்தவர்கள் அனைவரின் உடலும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி போயுள்ளது. ஒரு தாய் தனது குழந்தையை தனது மடியில் வைத்தபடியே கருகி போய் பலியாகி இருக்கிறார். பெட்டியின் கழிவறையிலிருந்து ஏற்பட்டி மின் கசிவு தீ பிடித்ததற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக