
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற கட்டிடத்தில் அறை எண் 63-ல் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
எம்.பிக்கள் வாக்கு
முதலில் எம்.பிக்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. பிரணாப் முகர்ஜிக்கு 527 எம்.பிக்களின் வாக்குகள் கிடைத்தன. அதாவது 72% எம்.பி.க்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பி.ஏ. சங்மாவுக்கு 208 எம்.பிக்களின் வாக்குகளே கிடைத்திருக்கின்றன. 15 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த எம்.பிக்களின் 3,73,116 வாக்குகள் பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்திருக்கிறது. சங்மாவுக்கு எம்.பிக்களின் 1,45,848 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பிரணாப் முகர்ஜிக்கு மொத்தம் 69 விழுக்காடு ஆதரவு கிடைத்திருக்கிறது. சங்மாவுக்கு 31 விழுக்காடு ஆதரவும் கிடைத்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக