#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

06 ஜூலை, 2012

போலீஸாரின் வசூல் இயந்திரமாக மாறிவிட்ட இ-செலான்




சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக போலீஸôர் பாரபட்சமாக இ-செலானில் வழக்குகளைப் பதிவு செய்து வசூலில் ஈடுபடுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், நடுத்தர வகுப்பு மக்கள் மத்தியில் பரவலாக போலீஸôர் மீதும், அரசின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து காவல்
துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் நடைபெற்ற மோசடிகளைத் தடுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவில் இ-செலான் திட்டத்தை 2011 ஜூன் 28-ல் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்துக்காக ரூ.2.83 கோடியில் புதிதாக 300 இ-செலான் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, போக்குவரத்து போலீஸôரிடம் ஒப்படைக்கப்பட்டன. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் காவல் துறை அதிகாரிகள் நினைத்ததுபோலவே நல்ல வெற்றியையும் அடைந்து, காவல் துறைக்கு நல்ல வருமானத்தையும் ஈட்டித் தருகிறது என்பது காவல் துறையினரின் கருத்து.
இத்திட்டத்தினால், விதிமுறைகளை மீறுவோர் மீது பதியப்படும் வழக்கின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. சென்னையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன் தினமும் சராசரியாக 3,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இப்போது தினமும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழக்குகள் வரை பதிவு செய்யப்படுகின்றன என்கிறார்கள் போக்குவரத்துக் காவல் துறையினர்.
முன்பு, வழக்குகளின் மூலம் மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை அபராதமாக கிடைத்த நிலையில், இப்போது மாதத்துக்கு அபராதம் மூலம் ரூ.1.80 கோடி வரை கிடைப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு, வருமானமும் பல மடங்கு அதிகரித்து இருப்பதால் இத் திட்டத்தை மாநிலத்தின் பிற பகுதிகளிலும் காவல் துறை விரிவுபடுத்தி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, இந்தத் திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் அபராதம் விதித்து, பணம் வசூலிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டம் குறித்து இப்போது பல்வேறு புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக இ-செலான் இயந்திரங்களை ஒருதலைபட்சமாக பயன்படுத்துவதாகவும், தவறாகப் பயன்படுத்துவதாகவும் வாகன ஓட்டிகள் தரப்பில் கூறப்படுகிறது. பாரபட்சமான நடவடிக்கை: இ-செலான் இயந்திரத்தை வைத்திருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஒரு நாளைக்கு 50 வழக்குகள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இவர்கள், வாகன ஓட்டிகள் மீது ஏதாவது ஒரு வகையில் வழக்குகளைப் பதிவு செய்து, அபராதம் விதிப்பதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முருகன் கூறுகிறார்.
அவசரத் தேவைக்காக மருந்துக் கடை, ஏ.டி.எம். மையம் செல்வதற்காக வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றால் கூட, உடனே போலீஸôர் "நோ பார்க்கிங்' பகுதியில் வாகனத்தை நிறுத்தியதாக வழக்குப் பதிவு செய்கின்றனர். ஆனால் உண்மையிலேயே போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் தினமும் சாலையில் வாகனங்களை நிறுத்தும் முக்கிய நபர்களை போலீஸôர் கவனிப்பதே கிடையாது. இதற்காக அவர்கள், மாதந்தோறும் போலீஸôரை கவனிப்பதே காரணமாகும். போலீஸôரின் இந்த பாரபட்சமான நடவடிக்கை ஒட்டுமொத்த காவல் துறை மீதே அதிருப்தி ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல போக்குவரத்து நெரிசல் மிகுந்த வேளைகளில் விடாப்பிடியாக இரு சக்கர வாகனங்களை நிறுத்தி, ஏதாவது ஒரு வகையில் போக்குவரத்து விதியை மீறியதாக வழக்குப் போடும் போலீஸôர், ஹோட்டல்களுக்கும் நிறுவனங்களுக்கும் தண்ணீர் ஏற்றிச் செல்லும் லாரிகளையும், வாட்டர் கேன் வேன்களையும் மறிப்பதும் கிடையாது, வழக்குப் போடுவதும் கிடையாது என்கிறார் தனியார் நிறுவன ஊழியர் எஸ்.டேவிட்.
அந்த ஹோட்டல்களில் இருந்து உணவையும், பணத்தையும் போலீஸôர் பெற்றுக் கொள்வதே அந்த வாகனங்கள் மீது வழக்குப் பதியாமல் இருப்பதற்கு காரணமாகும். போலீஸôரின் இந்த நடவடிக்கையால், நடுத்தர, சாமானிய மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தரகர்கள் ஆதிக்கம்: நகருக்குள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டும்தான் கன்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள், கோழி லாரிகள், ஆம்னி பஸ்கள் ஆகியவை வரவேண்டும் என்று காவல் துறை கூறிக் கொண்டாலும், இந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை வேளைகளில் கூட சில பகுதிகளில் சுதந்திரமாகச் செல்கின்றன. இதன் விளைவாக தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல், விபத்துகளும் நடப்பதற்குக் காரணமாக அமைகின்றன என்று வழக்குரைஞர் ஒருவர் கூறுகிறார்.
கனரக வாகனங்கள் சுதந்திரமாகச் செல்வதற்கு வாகன உரிமையாளர்களுக்கும், போலீஸôருக்கும் இடையே சில தரகர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் லாரி உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பணத்தை வசூலித்து, அதன் மூலம் காவல் துறை அதிகாரிகளை கவனிக்கின்றனர். சென்னையில் இப்போது இது ஒரு தொழிலாகவே நடப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இவர்களின் வாகனங்களை கீழ் நிலை போலீஸ் அதிகாரிகள் தெரியாமல் பிடித்தாலும், பின்னர் பெயரளவில், டிரைவர் யூனிபார்ம் அணியவில்லை என்று ரூ. 100 அபராதம் விதித்து வழக்குப் பதிவு செய்து அனுப்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வாகனங்களில் ரூ. 2,500 வரை அபராதம் விதிக்கும் அளவுக்கு விதிமுறைகள் மீறப்பட்டாலும், போலீஸôர் அதன் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது.
இதேபோல சென்னையில் இயங்கும் தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை போதுமான வாகன நிறுத்துமிடம் இல்லாமல், சாலையில்தான் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஆனால் இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது எந்தவொரு காவல் துறை அதிகாரியும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி.
காவல் துறையின் இந்த பாரபட்சமான நடவடிக்கையினால், இத் திட்டத்தை அறிமுகப்படுத்திய அரசுக்கும் அவப் பெயர் ஏற்படும் சூழ்நிலையை போலீஸôர் ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே தவறு செய்கிறவர்களைத் தப்பவிட்டு, விதிமுறைகள் தெரியாமல், போக்குவரத்து விதிகளை மீறும் அப்பாவி பொது மக்களைப் போலீஸôர் பிடித்து மீண்டும், மீண்டும் வழக்குகள் பதிவு செய்து அபராதம் வசூலிப்பது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முறைகேட்டை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட இ-செலான் திட்டத்தையும் போலீஸôர் தவறாகப் பயன்படுத்துவது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 வழக்குகள் போடாவிட்டால் மெமோ
சென்னை பெருநகர காவல் துறையில் வழங்கப்பட்டுள்ள 300 இ-செலான் இயந்திரங்கள் மூலம் தலா 50 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதனால் போக்குவரத்து போலீஸôர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், சீராக்குவதற்கும் பதிலாக வழக்குகளை பதிவு செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இதில் நாளுக்கு 50 வழக்குகள் பதிவு செய்யாத சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸôருக்கு மெமோ கொடுக்கப்படுவதாக போலீஸôர் தெரிவிக்கின்றனர். சில காவல் நிலையங்களில் 50 வழக்குகள் பதிவு செய்யும் வரை பணியை முடிக்கக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக போலீஸôர், வழக்குப் பதிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என புகார் கூறப்படுகிறது.
ஆர்வமில்லாத போலீஸார்
இப்போது போடப்படும் வழக்குகளில் 70 சதவீதம் ரூ. 100 அபராதம் செலுத்தும் வகையிலேயே போடப்படுகிறது. அதுவும் வேகமாக வாகனத்தை ஓட்டுதல், பதிவு எண் விதிமுறைப்படி எழுதாமல் இருத்தல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக அபராதம் வசூலிக்கப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட எடை, உயரத்தைவிட அதிகளவு பாரத்தை ஏற்றுதல், அனுமதிக்கப்படாத நேரத்தில் வாகனங்கள் நகரத்துக்குள் வருதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் வாகனத்தில் இருந்து புகை வெளியேறுதல் போன்ற விதிமீறல்களுக்கு பெயரளவிலேயே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த வழக்குகளை பதிவு செய்ய போலீஸôர் ஆர்வம் காட்டுவது கிடையாது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக