பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான ஏ.டி.எம் இயந்திரம் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவிலுள்ள பார்வையற்றோர் தலைமைக் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒரு பெரிய விசைப்பலகை, உயர்தர திரை, பெரிய பட்டன்கள், ஹெட்போன் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் தங்கள் பணப்பரிமாற்றத்தை உறுதி செய்து கொள்வதற்காக ஒலிபெருக்கியும் இந்த ஏ.டி.எம் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சாதாரண ஏ.டி.எம்-ஐ விட குறைவான பட்டன்களே இந்த ரக ஏ.டி.எம்-இல் இருக்கும். பார்வையற்றோர்கள் மட்டுமல்லாமல் பார்வை உடையவர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா அரசரான ஷேக் சுல்தான் முகமது அல் காசிமியின் ஆணையின் பேரில் அங்குள்ள ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி இந்த ஏ.டி.எம்-ஐ அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக