ஜெனீவாவில் நேற்று சிரியாவின் பிரச்னை குறித்துப் பேச உலகநாடுகள் ஒன்று கூடின. சிரியாவின் நிலைமை மிகவும் மோசமாவதை அறிந்து அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்தில் இக்கூட்டம் அமைக்கப்பட்டது.
அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர ஐ.நாவின் பிரதிநிதி கோஃபி அன்னானும் பிரிட்டன், சீனா, ரஷியா, அமெரிக்கா, ஈரான், குவெத், கத்தார், துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டத்திற்கு ஈரானும் சவுதி அரேபியாவும் அழைக்கப்படவில்லை.
சிரியாவில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நடவடிக்கைக் குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டம் சிரியா மக்களின் சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளையும், கொள்கைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இவற்றை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று அன்னான், தெரிவித்தார். பின்பு இந்த அரசியல் மாற்றத்திற்கான வழிமுறைகளையும், கொள்கைகளையும் உருவாக்க அமெரிக்க ரஷியத் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
பலமுறை தடை பட்ட இந்தக் கூட்டம் பின்பு நீண்ட நேரம் தொடர்ந்தது. பத்திரிகையாளரிடம் பேசிய ஹிலாரி கிளிண்டன், இந்தக் கூட்டத்தில் ஆதரவளித்தால் சிரியாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.
சிரியாவில் அரசியல் மாற்றம் தேவை என்ற எண்ணம் அனைவரிடத்திலும் காணப்படுவதாக மத்தியகிழக்கு நாடுகளுக்கான சுவிஸ்ஸின் சிறப்புத் தூதுவர் ஜுன் டேனியல் தெரிவித்தார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக