#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

10 ஜூலை, 2012

ஒலிம்பிக் 'கேம்ஸ் வில்லேஜில்' நடக்கும் கூத்து உங்களுக்குத் தெரியுமா?!


லண்டன் ஒலிம்பிக் போட்டி நெருங்கி விட்டது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி கிராமங்களில் அதாவது கேம்ஸ் வில்லேஜ்களில் நடைபெறும் கூத்துக்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகி விளையாட்டின் மறுபக்கத்தை புட்டுப் புட்டு வைத்துள்ளது.
போட்டி எங்கு நடந்தாலும் சரி, எந்த நாடு நடத்தினாலும் சரி கேம்ஸ் வில்லேஜ்களில் ஆணுறைகளுக்கும், மதுவுக்கும் பஞ்சமே இருப்பதில்லை என்று இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. ஆணுறைகள்தான் இதில் பெருமளவில் சப்ளை ஆகுமாம்.

முன்னாள் இங்கிலாந்து வீரர் ஒருவர்தான் இந்த நூலை எழுதியுள்ளார். தனது பெயரை குறிப்பிடாமல் புனை பெயரில் அவர் The Secret Olympics என்ற இந்த நூலை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
2000மாவது ஆண்டு சிட்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது வீரர்களுக்கு 70,000 ஆணுறைகளை ஏற்பாடு செய்திருந்தனராம் போட்டி அமைப்பாளர்கள். அனைத்துமே ஒரே வாரத்தில் காலியாகி விட்டதாம்.
ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது. இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம்.
இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம். கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.
லண்டன் ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் வில்லேஜிலும் வழக்கம் போல ஆணுறைகளுக்குப் பஞ்சம் இருக்காதாம். அனைத்துமே இலவசமாக தரப்படுகிறதாம். அதிலும் ஆணுறைகள் மீது விளையாட்டு லோகோக்களை முத்திரையிட்டு கொடுக்கப் போகிறார்களாம்.
இந்தக் கலாட்டா இப்படி இருக்க ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு ஒரு பெரிய கவலை காத்திருக்கிறது. அதாவது ஒலிம்பிக் போட்டி சமயத்தில், லண்டனில் பெரிய அளவில் விபச்சாரப் பெண்கள் படையெடுக்கப் போவதாக வந்த தகவல்தான் அவர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் பெண்கள் மிகப் பெரிய அளவில் பணம் பார்க்கும் நோக்கில் லண்டனில் குவியவுள்ளதாகவும், இவர்களால் மற்றவர்களுக்குப் பிரச்சினை ஏதும் நேராமல் பார்த்துக் கொள்ள போலீஸார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனராம்.
நம்ம ஊரிலிருந்தும் ஏராளமான பேர் போகின்றனர். பதக்கங்களை வென்று வருகிறார்களோ இல்லையோ, பத்திரமாக வந்து சேர்ந்தால் சரித்தான்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக