அப்சானா தன் கிராமத்து பள்ளி கூடத்தில் 10ம் வகுப்புக்கு மேல் படிக்க வசதி இல்லாத காரணத்தால் அத்துடன் தன் படிப்பை நிறுத்தி கொண்டார். அவரை தேர்ந்தெடுத்த பஞ்சாயத்து தேர்தலில் தான் அவரும் முதன் முறையாக ஓட்டு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்து செட்டிலாகும் பிற பெண்களை போலல்லாமல் அப்சானா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவராகவும் தேர்வு பெற்றுள்ளார்.
அப்சானா பஞ்சாயத்து தலைவராக வந்தது குறித்து வியப்படையவில்லை என்று சொல்லும் அவரின் பள்ளி தோழிகள் சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் நாட்டமுடையவள் என்றும் கூறினர். தன் கிராமத்தினர் விவசாயத்தை நம்பியிருப்பதால் மழை நீரை சேமிக்கும் திட்டத்தை தொடங்கியிருப்பதாகவும் தங்கள் கிராமத்தின் நில மட்டம் குறைவாக உள்ளதால் மழை காலங்களில் நீர் தேங்கி விடுவதால் சாலை மட்டத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் தாம் பஞ்சாயத்து தலைவியானவுடன் செய்த முதல் காரியமே தான் படித்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ஒதுக்குவதற்கு பணம் ஒதுக்கியதும் 12ம் வகுப்பு வரை படிக்க உயர் பள்ளிக்கான அடிக்கல் நாட்டியதுமே என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். பஞ்சாயத்து தலைவி எனும் முறையில் செய்யும் பணிகள் போக தந்தையின் நிலத்துக்கு பைக்கில் சென்று மேற்பார்வையிட்டும் தாய்க்கு உதவியாக சமையலும் செய்யும் அப்சானா வித்தியாசமான பெண் தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக