#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

17 ஜூலை, 2012

பள்ளி மாணவர்களிடமும் பளபளக்கும் செல்போன் !


செய்தித்தாள்களில் தென்பட்ட அதிர்ச்சி செய்தி அது! நடந்து முடிந்த ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 1100-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவன் அவன். 'திறமைசாலி’ என்று பாராட்டு பெற வேண்டிய சென்னையைச் சேர்ந்த அந்த மாணவன், இன்று 'அயோக்கியன்’ என்கிற அவப்பெயருடன் நிற்கிறான். காரணம், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, குறிப்பாக... பள்ளி ஆசிரியைகளுக்கு பல்வேறு எண்களில் இருந்து ஆபாசமான, அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை அவன் அனுப்பி இருக்கிறான். கூடவே, அநாகரிகமாகவும் பேசி இருக்கிறான்.செல்போன் எனும் சாதனத்தின் அபரிமிதமான வளர்ச்சி... இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள்
கொண்டுவந்துவிட்டது... யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதேசமயம், அதன் எதிர்விளைவுகள்தான் பகீர் கிளப்புகின்றன.

'அந்தக் கருவி, உண்மையில் நல்ல பாதையில்தான் நம் பிள்ளைகளைச் செலுத்துகிறதா? செல்போன் பயன்பாடு நம்மையே தின்றுவிட்டதா? பெண்களுக்கான சிக்கல்களை அது அதிகப்படுத்திவிட்டதா?' என்பது போன்ற கேள்விகளோடு சிலரைச் சந்தித்தபோது...

பவித்ரா, சமூகவியல் மாணவி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, சென்னை:
''கல்லூரி, அலுவலகம் என்று செல்லும்போதும், மாலை நேரம் கழித்து வீடு திரும்ப நேரிடும் சமயங்களிலும் பெண்களுக்குத் துணை யாகவும், தன் நிலை பற்றி வீட்டுக்கு அறிவிக்கும் கருவியாகவும் இருப்பது செல்போன்தான்.
இன்னொரு பக்கம் வீட்டில் இருக்கும் சமயங்களில் அப்பா, அம்மாவிடம்கூட பேசாமல் செல்போனில் தொலையும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெற்றோருக்குத் தெரியாமல் போர்வைக்குள் மறைத்துக் கொண்டு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். மேலும், அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கும் 'கம்பெனி’ கொடுத்து, சில பெண்கள் சிக்கலை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

மொத்தத்தில், செல்போன் எந்தளவுக்கு நமக்குப் பாதுகாப்பாகவும், துணையாகவும் இருக்கிறதோ... அதே அளவுக்கு உள்ளங்கைக்குள் அது கொண்டு வந்து சேர்க்கும் பிரச்னைகளும் அதிகமாகவே இருக்கின்றன!''
''இன்றைய இளைஞர்கள், டெக்னாலஜிக்கல் மாய உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். ஒரு மெஸேஜ் வந்தால்... அதற்கு ரிப்ளை அனுப்பாமல் எங்களால் இருக்க முடியாது. மொபைல், மெசேஜ், ஃபேஸ்புக், ட்விட்டர் இதெல்லாம்தான் எங்களின் உலகமாக இருக்கிறது. நண்பர்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க இவை எல்லாம்தான் எங்களுக்கு வழி. டெக்னாலஜியில் பல ஆபத்துகள் உள்ளன என்பது எங்களுக்கும் தெரியும்; அதிலிருந்து தற்காத்துக்கொள்ள உள்ள 'பிளாக்’ ஆப்ஷன்களையும் நாங்கள் அறிவோம்!''

''ஸ்கூல் படிக்கும்போதே இப்போதெல்லாம் பிள்ளைகள் செல்போன் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். 'கிளாஸ்ல எல்லா பிள்ளைகளும் வெச்சுருக்காங்கப்பா...’ என்று அவர்கள் மறுகும்போது, குழந்தைகளுக்கு சகல வசதிகளையும் செய்துகொடுப்பதாக நினைத்து, சில பெற்றோர்களும் செல்போன் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், பிள்ளைகள் அதில் தங்கள் பொழுதுகளை எல்லாம் வீண் செய்யும்போது, பெற்றோர்களின் வலியையும் வேதனையையும் அவர்கள் உணர்வதில்லை. எங்கேயாவது... ஏதாவது வில்லங் கத்தில் சிக்கிக் கொள்வார்களோ என்கிற நம் தவிப்பின் நியாயமும் அவர்களுக்குப் புரிவதில்லை. ஆறாவது விரல் போலாகிவிட்ட அந்த செல்போனில் செலவழிக்கும் நேரத்தில், துளிகூட தங்கள் பெற்றோர்களுடன் செலவழிப்பதில்லை.
தவிர, லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைலாக மாற்றிக் கொண்டே இருப்பது இப்போது டிரெண்டாகி உள்ளது. தேவையற்ற மொபைல், தேவையற்ற ரீ-சார்ஜ் எல்லாவற்றின் மூலமாகவும் கரைவது பெற்றோரின் பணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''
''பிள்ளைகளுக்கு மரியாதை என்கிற  விஷயத்தை மறக்கடிக்கிற விஷயமாக செல்போன் இருக்கிறது. யார் என்ன கேள்வி கேட்டாலும், செல்போனில் நோண்டியபடியேதான் பேசுகிறார்கள். அதிலும் வகுப்பு நேரங்களில் இந்த செல்போனை வைத்து அவர்கள் செய்யும் அட்டூழியம் அதிகம். ஆசிரியர் வகுப்பில் இருக்கும்போதே தங்களுக்குள் எஸ்.எம்.எஸ். அனுப்பி முடித்ததும், ஏதோ காளையை அடக்கிவிட்ட சாகச சந்தோஷம் அவர்கள் முகத்தில்! இதையெல்லாம் செய்வதன் மூலம் எங்களை முட்டாளாக்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த செல்போன் சேட்டைகள் எல்லாம் அவர்களின் படிப்பை, பண்பைத்தான் குறைக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குறுஞ்செய்திகளுக்காக ஆங்கிலத்தைச் சுருக்கி சுருக்கி டைப் செய்து பழகி, ஷ்வீபீ, ஷ்s, ளீ, றீஹ்ளீ என அந்த மொழிதான் தேர்வுத்தாள்களிலும் எதிரொலிக்கிறது. இதெல்லாம் போதாதென்று, வகுப்பில் இருக்கும் அப்பாவிப் பிள்ளைகளுக்கும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை எம்.எம்.எஸ்-ல் அனுப்பி அவர்களையும் சீரழிக்கிறார்கள். இதன் அபாய விளைவுகள் மிக அருகில் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.''
'செல்போன் பிள்ளைகளை மனதளவில் மட்டுமல்ல... உடலளவிலும் பாதிக்கிறது. அதன் காந்தக் கதிர்வீச்சு, மூளையின் சர்க்யூட் மற்றும்  சர்க்குலேஷனை பெரிய அளவில் பாதிக்கிறது. மொபைல் இல்லாமல் ஒருநாள்கூட இருக்க முடியாது எனும் அளவுக்கு, இது ஒரு போதையாகவே மாறிவிட்டது.

இன்னுமொரு அவலம்... மொபைல்களால் பரிமாறப்படும் செய்தியின் தரம் குறைந்துவிட்டது. நேரடியாகப் பேசும்போது ஒருவரின் கருத்தோடு முரண்பட்டால்... இரண்டு பேரும் பேசித் தீர்த்துக்கொள்ளும் குணம் முன்பிருந்தது. இப்போது அந்த இங்கிதம் தொலைந்து உடனடியாக அந்தக் 'கால்’ஐ கட் செய்வது, அல்லது அவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதை நிறுத்துவது, அல்லது அந்த எண்ணையே மொபைலில் 'பிளாக்’ செய்வது என்று முடிகிறது. இதெல்லாம், மனதளவில் சிக்கல் மிகுந்த அல்லது வலிமிகுந்த தருணங்களில் இந்தப் பிள்ளைகள் எல்லாம் போராட்டக் குணத்தை இழந்து நிற்பதற்கே அவர்களை இழுத்துச் செல்லும்.
சமயங்களில் தெரியாத எண்ணில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ் வந்து தற்கொலை வரை போன பல கேஸ்களையும் பார்த்து இருக்கிறேன். செல்போன் பயன்பாட்டைக் குறைத்து, அவசியங்களுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவது என்று பழகிக் கொண்டால் மட்டுமே இதனால் விளையும் சிக்கல்கள் மட்டுப்படும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக