
தமிழகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 45 வாக்குகளும் பி.ஏ.சங்மாவுக்கு 148 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. அதாவது பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு 7920தான். பி.ஏ.சங்மாவுக்கோ மொத்தம் 26,048 வாக்குகள் கிடைத்தன.
அதேசமயம், தமிழ்நாட்டில் 4 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரணாப் முகர்ஜியை திமுக கூட்டணி ஆதரித்தது. அதேபோல் மனித நேய மக்கள் கட்சி,புதிய தமிழகம்,மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் அப்படியே பிரணாப் முகர்ஜிக்கு 45 வாக்குகள் கிடைத்துவிட்டன.
பி.ஏ.சங்மாவை அதிமுக ஆதரித்தது. அதிமுகவுக்கு 150 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அப்படியானால் அனேகமாக அதிமுக எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள்தான் செல்லாதவையாகி இருக்கலாம்.
புதுச்சேரியில் பிரணாப் முகர்ஜிக்கு மொத்தம் 23 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 368. ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மாவுக்கு வெறும் 5 வாக்குகள்தான் கிடைத்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக