நன்றி.தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
23 பிப்ரவரி, 2011
அறிமுகமாகிறது 150 ரூபாய் நாணயம்
புதுடில்லி: நம்நாட்டில் வரிதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, 150 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. சர்வதேச நடைமுறைக்கேற்ப, நம்நாட்டில், 1860 முதல், வரிதிட்டம் செயல்படுத்தப்பட்டு, 150 ஆண்டுகள் ஆகிறது. இதை நினைவு கூறும் வகையில், மத்திய அரசு, 150 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது. வரும் 28ம் தேதி பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு முன், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த நாணயத்தை வெளியிடுகிறார். வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதையொட்டி, ஐந்து ரூபாய் நாணயமும் வெளியிடப்படுகிறது. இந்திய வரலாற்றில், 150 ரூபாய் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. புதிய, 150 ரூபாய் நாணயத்தில், சத்தியமேவ ஜெயதே என்ற வாசகமும், சாணக்கியரின் உருவமும், தாமரையை மொய்க்கும் தேனியும் இடம் பெற்றிருக்கும். வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாக கலவையால், புதிய நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக