அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
23 பிப்ரவரி, 2011
8 ஆண்டுகளுக்கு பின் கோத்ரா திரும்பினார்: உசேன் உம்ராஜி
கோத்ரா (குஜராத்): கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்ட மவுல்வி உசேன் உம்ராஜி, எட்டு ஆண்டுகளுக்குப் பின், தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். கோத்ரா ரயில் நிலையத்தில், 2002ல், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, 134 பேர் கைது செய்யப்பட்டு, 94 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. சபர்மதி சிறைச்சாலையில், சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டு, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில், 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும், மவுல்வி உசேன் உமர்ஜி, கோத்ரா நகராட்சித் தலைவர் முகமது அப்துல் ரகிம் உள்ளிட்ட, 63 பேரை, சிறப்பு கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மவுல்வி உமர்ஜி உள்ளிட்டோர், எட்டு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின், நேற்று, தங்கள் சொந்த ஊரான கோத்ராவுக்குத் திரும்பினர். அவர்களை உறவினர்கள் வரவேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக