அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் 5.2.2011 சனிக்கிழமை அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பி. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அதிமுக பொருளாளர் முன்னாள் அமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது சிறுபான்மை மக்களின் சார்பான கோரிக்கைகள் அடங்கிய கடிதத்ததை அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவிடம் தமுமுக & மமக நிர்வாகிகள் வழங்கினர். மேலும் தேர்தல் வியூகங்கள் பற்றியும் விரிவாகப் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக