காட்டுமன்னார்கோவில் : லால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் புகுந்த முதலையை, தீயணைப்புத் துறையினர் பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹாலிது. இவருக்குச் சொந்தமான வெற்றிலை கொடிக்கால் வீராணம் ஏரிக்கரையையொட்டி உள்ளது. வழக்கம்போல் நேற்று காலை கொடிக்காலுக்குச் சென்ற ஹாலிது, அங்கு முதலை இருந்தது கண்டு திடுக்கிட்டார். தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கஜபதி ராவ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொடிக்காலில் பதுங்கியிருந்த முதலையை, 4 மணி நேரம் போராடி பிடித்து, வனவர் சரவணகுமாரிடம் ஒப்படைத்தனர். 10 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட முதலை, சிதம்பரம் அடுத்த வக்காரமாரி குளத்தில் விடப்பட்டது.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
20 பிப்ரவரி, 2011
லால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் முதலை பிடிபட்டது
காட்டுமன்னார்கோவில் : லால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் புகுந்த முதலையை, தீயணைப்புத் துறையினர் பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹாலிது. இவருக்குச் சொந்தமான வெற்றிலை கொடிக்கால் வீராணம் ஏரிக்கரையையொட்டி உள்ளது. வழக்கம்போல் நேற்று காலை கொடிக்காலுக்குச் சென்ற ஹாலிது, அங்கு முதலை இருந்தது கண்டு திடுக்கிட்டார். தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கஜபதி ராவ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொடிக்காலில் பதுங்கியிருந்த முதலையை, 4 மணி நேரம் போராடி பிடித்து, வனவர் சரவணகுமாரிடம் ஒப்படைத்தனர். 10 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட முதலை, சிதம்பரம் அடுத்த வக்காரமாரி குளத்தில் விடப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக