அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
13 பிப்ரவரி, 2011
சிதம்பரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அல்லல்படும் மக்கள்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு தண்ணீர் வசதி இல்லாததால் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை.
சிதம்பரம், பிப். 13: சிதம்பரம் ரயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தொலைவுக்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் டிசம்பர் 2006-ல் தொடங்கியது.இப்பணி ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் கழித்து முடிவுற்று 2010-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில் ஓடத் தொடங்கியது.அகல ரயில்பாதை அமைப்பதற்கு முன்னதாகவே 2003-ம் ஆண்டு ரூ.55 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.சிமென்ட், இரும்பு போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தால் போதிய தொகை கிடைக்காததால் ஒப்பந்தக்காரர்கள் கட்டுமானப் பணிகளை பாதியிலேயே விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் ரயில்வே நிர்வாகமே கூடுதல் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு சில மாதங்கள் முன்பு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.ஆனால் கட்டடப் பணிகள் முழுமையுறாமல் உள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்டு திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதுபோன்று குடிநீர் வசதி கிடையாது. இதனால் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயில் நிலையத்தில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.எனவே ரயில்வே நிர்வாகம் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை திறக்க வேண்டும் என்பதே பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் கோரிக்கையாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக