தொழுகை சொர்க்கத்தின் திறவுகோள்!
தொழுகை முதலில் கேட்கப்படும் கேள்வி!
தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்! - இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொலியில் கேட்கக் கூடிய வாசகங்கள் தான். தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்? நமது தோல்விகளுக்கு நாம் தொழாமல் இருப்பது தான் காரணமா?
யார் தொழுகையை நிலை நிறுத்துகிறாரோ அவர் தீனை நிலை நிறுத்தியவராவார். யார் தொழுகையை விட்டு விடுகிறாரோ, அவர் தீனைத் தகர்த்தவர் ஆவார். (சரி பார்க்க) தீன் என்பது என்ன? மார்க்கம் அல்லவா? அது ஒரு முழுமையான வாழ்கை நெறி அல்லவா? அப்படியானால் - தொழுகைக்கும் வாழ்க்கைக்கும் அப்படியென்ன நெருக்கம்?
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)
அது ஏன் அப்படி?
இஸ்லாத்தில் - தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
ஏனெனில் அல்லாஹு தஆலா நமது வாழ்க்கையோடு தொழுகையை அந்த அளவு பின்னிப் பிணைத்திருக்கின்றான். எப்படி என்கிறீர்களா?
சான்றாக - தொழுகையுடன் சுத்தம் இணைந்துள்ளது. உளூ இல்லாமல் தொழ முடியாது. இடம் சுத்தம், உடை சுத்தம், உடல் சுத்தம் அவசியம். சுத்தம் வெற்றி தருமா தராதா?
தொழுகை - நேரத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. நேரத்தைப் பேணுபவர்கள் வெற்றி பெறுவார்களா மாட்டார்களா?
தொழுகை - நல்லொழுக்கத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த நல்லொழுக்கம் வெற்றியைத் தருமா தராதா?
தொழுகை - பொறுமையுடன் இணைக்கப் பட்டுள்ளது. பொறுமையாளர்கள் வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா?
தொழுகை - ஜகாத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. தர்மம் நமக்கு வெற்றியைத் தருமா தராதா?
தொழுகை - ஒற்றுமையைக் கற்றுத்தருகிறது. வெற்றிக்கு - ஒற்றுமை அவசியமா? இல்லையா?
தொழுகை - தலைமைக்குக் கட்டுப் படுவதன் அவசியத்தைக் கற்றுத்தருகிறது. வெற்றிக்கு - தலைமைக்குக் கட்டுப் படுவது அவசியமா? இல்லையா?
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக