பெருங்கூட்டம் கூடியது |
கடந்த ஒரு வார காலமாய் நடந்துவருகின்ற ஆர்ப்பாட்டங்களில் மிக அதிகமான மக்கள் கூட்டம் இதுதான்.
தஹ்ரீர் பெருஞ்சதுக்கம் மக்கள் வெள்ளத்ததால் நிரம்பி வழிந்தது, அந்தச் சதுக்கத்தை சுற்றவரவுள்ள வீதிகளிலும் ஏராளமான மக்கள் கூடினார்கள்.
கூடிய மக்களிடையே ஒருவித குதூகலம் தென்பட்டது.
மக்கள் ஒன்றாக சேர்ந்து பாடியபடியும், பதாதைகளையும், கொடிகளையும் அசைத்த படியும் எழுச்சியுடன் காணப்பட்டனர்.
எகிப்தில் கடந்த முப்பது வருட காலத்தில் மக்கள் வாய்திறந்துச் சொல்வதற்கு அஞ்சிய விஷயங்கள் இப்போது கோஷங்களாக ஒலிக்கின்றன.
கோரிக்கை "சமூகத்துடைய அனைத்து பிரிவு மக்களும் இங்கே கூடியுள்ளனர். அவர்களுடைய ஒரே கோரிக்கை என்னவென்றால், மறுப்பு சொல்லாமல் முபாரக் பதவி விலக வேண்டும், மக்கள் ஜனநாயக ரீதியில் தங்களுக்கு வேண்டுமான ஆட்சியை நியமித்துக்கொள்வார்கள் என்பதுதான்."
|
கடந்த சில நாட்களாக நிலைகொண்டுள்ளது போலவே செவ்வாயன்ரும் அந்தச் சதுக்கத்தின் விளிம்பில் இராணுவ வாகனங்கள், தாங்கிகள் நின்றன. ஆயினும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சிப்பாய்கள் சிநேகமாகப் பழகுவதைக் காண முடிந்தது.
இராணுவத்தினரின் எவ்வித தடங்லும் இன்றி மக்கள் கூடுவதையும் நடமாடுவதையும் அவதானிக்க முடிந்தது.
எதிர்க்கட்சிகளுடன் அரசியல் சீர்திருத்தம் பற்றிப் பேசப்போவதாக துணையதிபர் அறிவித்திருந்தார். ஆனால் முபாரக் பதவி விலகுவதற்கு முன்பாக மற்ற விஷயங்களைப் பற்றி தாங்கள் பேசத் தயாராக இல்லை என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
துப்பாக்கிப் பிரயோகம் செய்தோ பிற உத்திகளைப் பயன்படுத்தியோ ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க முற்படப்போவதில்லை என எகிப்திய இராணுவம் திங்களன்று வெளிப்படையாக அறிவித்திருந்தது.
நியாயமான காரணங்களுக்காக போராடும் தம் நாட்டு மக்களுக்கு எதிராக தாங்கள் செயல்படவில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இருந்தாலும், தலைநகரம் கெய்ரோவுக்குள் வருகின்ற நெடுஞ்சாலைகளில் இராணுவத்தினர் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
தலைநகரில் ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கெய்ரோ நோக்கி வரக்கூடிய கார்கள் அனுமதிக்கப்பட்டாலும் பேருந்துகளும் மற்ற பெரிய வாகனங்களும் நிறுத்திப் பரிசோதிக்கப்படுகின்றன.
நன்றி.பிபிசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக