அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
02 பிப்ரவரி, 2011
மலேகான் குண்டுவெடிப்பு!! ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது!!
மும்பை,பிப்.2: 2008-ம் ஆண்டில் நடைபெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரவீண் முத்தலிக் கைதுச் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்துவந்த பிரவீணை கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் லோககில் வைத்து மஹாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைதுச் செய்தனர். மஹாராஷ்ட்ரா சட்டவிரோத செயல் தடுப்புச்சட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 14-ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவருடன் சேர்த்து மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மலேகானில் குண்டுவெடிப்பு நிகழும்பொழுது இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்தின் அந்தரங்கச் செயலாளராக பணியாற்றியவர்தான் பிரவீண். இவ்வழக்கில் சதித்திட்டத்தை வெளிக்கொணர்வதில் பிரவீணின் கைது உதவிகரமாக இருக்கும் என மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பை திட்டமிடுவதற்கு புனே, நாசிக், பஞ்ச்வாதி ஆகிய இடங்களில் நடந்த ரகசிய கூட்டங்களில் பிரவீண் முத்தலிக் பங்கேற்றுள்ளார். குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை பாதுகாப்பாக வைத்திருந்த வாடகை அறையின் சாவி பிரவீண் முத்தலிக் வசமிருந்துள்ளது. அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்தான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ஃபாரன்சிக் பரிசோதனையில் உறுதியானதாக ராகேஷ் மரியா தெரிவித்தார்.
மெக்கானிக் எஞ்சினீயரிங் பட்டதாரியான பிரவீண் முத்தலிக் அபினவ் பாரத் என்ற பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராவார். இவ்வழக்கின் குற்றவாளிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். பயங்கரவாத பெண் சாமியார் பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோரை முன்னரே ஏ.டி.எஸ் கைதுச் செய்திருந்தது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி வடக்கு மஹாராஷ்ட்ராவின் நாசிக் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறுபேர் கொல்லப்பட்டிருந்தனர். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தொழுகைக்காக செல்லும் மஸ்ஜிதின் அருகில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக