மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக மீனவர் சமுதாயம் உயிரிழப்புகளையும், படுகாயங்களையும் எதிர்கொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், நாகையைச் சேர்ந்த 106 மீனவர்கள் 15.02.2011 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 22.02.2011 அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக