அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 பிப்ரவரி, 2011
ரூ.நாற்பது கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய பள்ளிவாசல் கட்டப்படுகிறது
இந்தியாவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல் கேரளாவின் கோழிகோட்டில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இத்தகவலை அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த 5 மாத காலத்திற்குள் இதற்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படவுள்ளதாம் .
முகலாயர் கால கட்டடப் பாணியில் அமைக்கப்படவிருக்கும் இந்தப் பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், கருத்தரங்கு நடத்துவதற்கான ஆடிட்டோரியம் மற்றும் பெரிய நூலகமும் பள்ளிவாசல் வளாகத்தி்ல் கட்டப்படும் என்றும், 1000 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்படும் என்றும் ரியாஸ் முகம்மது கூறினார்.
நன்றி.இந்நேரம் .காம்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக