2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதம் என்ற அட்டவணையில் கீழ் இஸ்லாம் என்பதற்கு பதிலாக முஸ்லிம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக அனைத்திந்திய அளவில் சில முஸ்லிம அமைப்புகள் நமக்கு தகவல் அளித்தன. இந்த தகவல் அடிப்படையில் மதம் என்றே கேள்விக்கு இஸ்லாம் என்பதற்கு பதிலாக முஸ்லிம் என்று கணக்கெடுப்பு படிவத்தில் அச்சிடப்பட்டிருந்ததால் முஸ்லிம் என்றே பதில் தருமாறு தமுமுக சார்பில் கேட்டுக் கொண்டோம்.
இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதம் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழக முஸ்லிம்கள் அனைவரும், மதம் என்ற கேள்விக்கு இஸ்லாம் என்றே குறிப்பிடவும்.
தமுமுக-மமக மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், ஜமாஅத்
நிர்வாகிகளும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கணக்கெடுப்பாளர்களுடன் உடனிருந்து விபரம் அறியாத முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். முன்னதாக நாளைய ஜும்ஆ தினத்தில் ஜும்ஆ உரைக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் சமுதாய மக்களுக்கு அறிவிப்பு செய்யுமாறு ஜமாஅத் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ் படிவம் டவுன்லோட் செய்ய இந்த சுட்டியை அழுத்துக
http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Tamil_HH_Side_A_NT.pdf
http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Tamil_HH_Side_B_NT.pdf
இந்த படிவத்தில் உள்ள மதம் என்ற 7வது அட்டவணையில் இஸ்லாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளளது.
ஆங்கில படிவம் டவுன்லோட் செய்ய பின் வரும் சுட்டியை அழுத்துக
http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/English_HH_Side_A_NT.pdf
http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/English_HH_Side_B_NT.pdf
இதில் religion என்ற 7வது அட்டவணையின் கீழ் முஸ்லிம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக