#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 ஜூன், 2011

பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை !



( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும்.
புனிதமான நம் மான,மரியாதையை அல்லாஹ் காப்பாற்றுவானாக..)

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதே வேலையில் மறுபுறம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது.

எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும் ஆனால் இன்றைய உலகின் எதார்த்தம் அப்படியே தலைகீழாக இருக்கிறது.

தன் சக மனிதனுக்கு கேடுவிளைப்பதையே தன் தினத்தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கிவிட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தொலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.  

சிங்கப்பூரில் செயற்கை முறையில் உருவாகும் ராட்சத மர பூங்கா

 
சிங்கப்பூரில் செயற்கை முறையில் ராட்சத வடிவ மரங்கள் கொண்ட பூங்கா ஒன்று உருவாகிறது. இதற்காக 20 முதல் 85 டன்கள் எடை கொண்ட உலோக சட்டங்களை பயன்படுத்தி வானை தொடும் உயரத்தில் மரத்தின் அடிப்பாகம் நிறுவப்படுகின்றது. பின், அதனுடன் ஆயிரக்கணக்கான இரும்பு கம்பிகள் கொண்டு மரக்கிளைகள் வடிவமைக்கப்படுகின்றன. சுமார் 50 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக காட்சி தரும் இவற்றில் 7 மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சூரிய தகடுகள் பொருத்தப்படுகின்றன. இதனால் செயற்கை முறையில் இரவிலும் ஒளியை பெறலாம். மேலும் உலகில் காணப்படும் பல்வேறு வகை செடிகளும் மரங்களின் உள்ளே இடம் பெறுகின்றன. இவை சிங்கப்பூரில் நடைபெறும் பூங்கா திருவிழாவின் போது அமர்க்களமாக காட்சி தரும். 

நன்றி.தினத்தந்தி

29 ஜூன், 2011

ஓர் எச்சரிக்கை !!!!

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர்களே,

சில தினங்களாக நமது சகோதரிகளின் செல்லிற்கு ஒரு பெண் போன் செய்து நமது பெண்களின் பெயரை சரியாக சொல்லி அவர்களின் கணவரின் பெயரையும் சொல்லி துபாயில் உங்கள் கணவர் இருக்கும் ஃபிளாட்டின் அருகில் நாங்கள் தங்கி உள்ளோம், தற்பொழுது வெகேசனில் வந்துள்ளோம் உங்கள் கணவர்தான் இந்த நம்பர் கொடுத்து பேச சொன்னார், நல்லா இருக்கீங்களா, பிள்ளைகள் நல்லா இருக்கா என்றெல்லாம் விசாரித்து அடுத்த வாரம் திரும்ப துபாய் செல்கிறோம் போகும் முன் வந்து பார்த்து விட்டு செல்கிறோம் என்று சொல்கிறார்கள்,

இஸ்லாமிய ஆடையுடன் பழுதூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள அமெரிக்காவில் தடை


muslim weight lift womenவாஷிங்டன்:பழுதூக்கும் போட்டியில் இஸ்லாமிய ஆடையுடன் கலந்து கொள்ள அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ, 53 கிலோ பிரிவுகளில் சிறந்து விளங்கிய குல்ஸும் அப்துல்லாஹ்வுக்கு அடுத்து வரவருக்கும் தேசிய போட்டிகளில் பங்கேற்க அமெரிக்க வைட்லிஃப்டிக் அசோசியேசன் தடை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்காகவாவது 'தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!



உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்?   உண்மையான  நண்பர்களுக்கு   பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே    நண்பர்களாக  உள்ளார்களா?  அந்தக கற்பனைப்பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறீர்கள்  என்று அர்த்தம்.



நர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும்,  கண்கள் ஒடுங்கியும்  காணப்பட்டான். 

ஊடகங்களின் பார்வையில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நலப்பணிகள்ஊடகங்களின் பார்வையில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நலப்பணிகள்



28 ஜூன், 2011

ம.ம.க.,வுக்கு வாருங்கள்: ஜவாஹிருல்லா அழைப்பு

 
சென்னை : ""மனிதநேய மக்கள் கட்சிக்கு வாருங்கள், உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம்,'' என, முஸ்லிம் அமைப்புகளுக்கு, ம.ம.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார். தமிழக இஸ்லாமிய உலமாக்களின் அமைப்பான, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் சார்பில், தமிழக சட்டசபை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடந்தது. அமைப்பின் தலைவர் முகமது கான் பாகவி தலைமை தாங்கினார். பொதுச்செயலர் தர்வேஷ் ரஷாதி முன்னிலை வகித்தார்.

காஸ் சிலிண்டர் விலையில் ரூ.15 குறைப்பு: "வாட்' வரியை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா

 
 

சென்னை:சமையல் காஸ் மீது, தமிழக அரசு விதிக்கும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை முற்றிலும் நீக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில், 14 ரூபாய், 73 காசு குறையும். இனி வருங்காலங்களிலும் சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமையல் காஸ் விலையை குறைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் மற்றும் மூத்த அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

27 ஜூன், 2011

நெல்லிக்காய் (கனி) எத்தனை மருத்துவ குணம்

நெல்லிக்காயோட அறிவியல் பேரு... பைலாந்தஸ் எம்ப்ளிகா. நெல்லிக்காய் மரத்தின் இலைகளோட சாறு ரொம்ப நாளா ஆறாம இருக்குற புண்ணுக்கு நல்ல மருந்து. இலையோட வடிசாற்றையும், வெந்தயத்தையும் கலந்து சாப்பிட்டா, வயிற்றுப்போக்கு குணமாகும்.

பட்டையும், வேரும் உடலுக்கு வலு சேர்க்கும். மலர்கள் குளிர்ச்சி தருபவை. வைட்டமின் சி குறைவால வரும் ஸ்கர்வி நோயைத் தீர்க்குது. குளிர்ச்சியைத் தருது. ஜீரணத்தை ஊக்குவிக்குது. சிறுநீரக கோளாறுகளைப் போக்கும். ரத்த சோகை, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து இந்த நெல்லிக்காய்தான்.

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! (Photo Gallery)


சகோ..! இங்கே சில மதிநுட்பமான கண்டுபிடிப்புகளை, மனிதனின் நூதன சிந்தனை திறனை வெளிப்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வமான புதிய எண்ணங்களை, புகைப்படங்களாக வந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உவகை அடைகிறேன். எவ்வித ராயல்டியோ, பேடன்ட் பயமோ இன்றி... இவற்றை நீங்களும் உங்கள் வாழ்வில் தாராளாமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.  :)

மாடிப்படிகளுக்கு கீழேயுள்ள இடத்தை எப்படி உபயோகமாய் மாற்றுவது..?
அல்லது...
ஒரு அலமாரியையே அழகிய மாடிப்படியாக்குவது எப்படி..?

26 ஜூன், 2011

அடுப்பை விட வயிறுதான் அதிகம் நேரம் எரிகிறது!

ஜூன் 26,இன்றைய காலைப் பொழுதில் பல வீட்டு சமையல்கட்டில் அடுப்புகள் மெதுவாகத்தான் எரிந்திருக்கும். ஆனால் வயிறு மட்டும் வேகமாக பற்றி எரிந்தது.

பால்காரன் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தலைப்பு செய்தி இதுதான்! கியாஸ் விலை ரூ.50  ஏத்திப்புட்டாங்களாமே...”

ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ... நம்ம மாதிரி நடுத்தர ஜனங்க இனி வாழவே முடியாது... ம்ம் என்ன செய்றது...? என்று அங்கலாய்த்து தவித்த பெண்கள் ஏராளம்.

முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்


டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, முஸ்லீம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் யாயிர் கூறுகையில், மரணத்தையும் துவேஷத்தையும் கொண்டாடுபவர்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளார்.

24 ஜூன், 2011

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு-லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிகவினரால் பரபரப்பு

சென்னை: தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் மகன் பிரபாகரனுக்கு சீட் கொடுக்க மறுத்ததால், சென்னை லயோலா கல்லூரி முதல்வரை நேரில் சென்று மிரட்டியுள்ளனர் தேமுதிக நிர்வாகிகள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
Vijjayakanth with wife and son Prabhakaran
வரலாறு காணாத அளவுக்கு கை நிறைய எம்.எல்.ஏக்கள் கிடைத்து விட்டதால் தேமுதிகவினர் ஆங்காங்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் தலைநகர் சென்னையில், இந்தியாவின் மிக முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான லயோலா கல்லூரிக்குள் புகுந்து, அந்தக்
கல்லூரியின் முதல்வரையே மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் தேமுதிகவினர்.

கொள்ளுமேடு தமுமுக சார்பில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா''



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகதின் சார்பில் ஆண்டுதொரும் மாணவ,மாணவிகளை ஊக்குவைப்பதற்க்காக பாராட்டு & பரிசு வழங்கும் விழாயடுப்பது வழக்கம் அதுப்போல் இந்தாண்டும்  கொள்ளுமேடு முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் 2011 நடைப்பெற்ற SSLC பொதுத்தேர்வில்  வெற்றிப்பெற்ற மாணவ & மாணவிகளுக்கு பாராட்டு & பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை (24.06.2011)நடைப்பெற்றது.


 தமுமுக வின் மாவட்டச்செயளாலர் N.அமானுல்லாஹ் தலைமைதாங்க , ஹாஃபிஜ்  ரிஃபாயி கிராத் ஓதி துவக்கி  வைக்க கொள்ளுமேடு தமுமுக நகர தலைவர் M.ஷஃபி வரவேற்ப்பு நிகழ்த்தினார். 

''ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா


எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்!'' _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.



'இளமை இதோ இதோ', 'முயலுக்கு மூனுகால்,' 'மானாமதுரை மல்லி', 'எனக்காகக் காத்திரு' போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது,
அதைவிட அதிர்ச்சியான செய்தி.

23 ஜூன், 2011

திருக்குர்ஆன் அறிவியல்

13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.

இந்த வசனங்கள், (13:8, 22:5) மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறுகின்றன.
...பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே முயற்சிக்கும்.

சட்டமன்ற உறுப்பினர்​களுக்குப் பாராட்டுக் கூட்டம்


 

இலங்கை அரசைக் கண்டித்து துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி முடிவு


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கட­ல் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களுக்குச் சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பரப்பு கடந்த சில நாட்களாக கடும் சீற்றத்துடன் காட்சி அளித்தது. காற்றின் வேகத்தில் திசை தெரியாமல் தவித்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

18 ஜூன், 2011

உப்புமா தயாரித்து அமெரிக்க சமையல் போட்டியில் வென்ற இந்தியர்

Upma
 
 
உப்புமா என்றவுடன் நம்மில் பலர் முகம் சுளிப்பதைப் பார்க்கலாம். ஆனால் அந்த உப்புமாதான் அமெரிக்காவில் நடந்த சர்வதேச சமையல் கலைப் போட்டியில் இந்தியருக்கு முதல் பரிசை பெற்றுத் தந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

மும்பையை சேர்ந்தவர் கர்டோஸ். இவர் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் சமையல் நிபுணராக பணியாற்றுகிறார்.

வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு


காட்டுமன்னார்கோவில் : டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கடலூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்ட காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் இருந்து கடந்த 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டு கீழணைக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் வருகிறது. கடலூர் மாவட்டம், கொள்ளிடம் பாலம் பணி நடப்பதால் அங்கு தண்ணீர் அதிக அளவில் தேக்காமல் வடவாறு வழியாக வீராணத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

குரங்கை விண்வெளிக்கு அனுப்பும் ஈரான்


ராசாத்-1 என்ற செயற்கைகோளை ஈரான் தயாரித்துள்ளது. இதை மலேக் ஆங்தார் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் கவோஸ்கர்-5 என்ற ராக்கெட் மூலம் வருகிற ஜூலை 23-ந்தேதிக்கும் ஆகஸ்டு 23-ந்தேதிக்கும் இடையே விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது.

சவுதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்கள்

சவுதி அரேபியாவில் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்ட அரசு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி கார் ஓட்டு பவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கார் ஓட்டிய ஷரீப் என்ற 32 வயது கம்ப்யூட்டர் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.

ஆசைகளைத் துறந்தவர் என்று நம்பப்பட்ட சாமியார் அறையில் 12 கோடி ரூபாய் பணம், 98 கிலோ தங்கம்

 
சமீபத்தில் காலமான புட்டபர்த்தி சாய்பாபாவின் அறையில் சுமார் 12 கோடி ரூபாய் பணமும், 98 கிலோ தங்கமும், சுமார் 300 கிலோ வெள்ளியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சாய் பாபா காலமானது முதல் பூட்டி இருந்த அவருடைய தனி இருப்பிடமான யஜுர் மந்திர் திறக்கப்பட்ட பொழுது இவ்வாறு தங்கமும், வெள்ளியும், ரொக்கப் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

17 ஜூன், 2011

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் கார

Carrot
பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப்போல தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது.

காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்

கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.

9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது


சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, சர்வதேச அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் லேப்-டாப் மாதிரியை, "எல்காட்' நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அளவில், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 மாணவர்கள் 7.5 லட்சம் மாணவர்கள் உள்ள விவரத்தை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசிடம் சமர்ப்பித்தனர். அது தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் "எல்காட்' அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கவர்னர் உரையில், இலவச லேப்-டாப் வழங்குவதை அரசு உறுதி செய்தது. இலவச லேப்-டாப் தயாரிப்பதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பை எல்காட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாபா ராம்தேவ் vs ஷோகோ அசஹாரா.. ஓர் ஆன்மிக பயங்கரவாதம்...


பாபா ராம்தேவ் vs ஷோகோ அசஹாரா.. ஓர் ஆன்மிக பயங்கரவாதம்...
பாபா ராம்தேவ் பற்றி இப்பொழுது பல பத்திரிகைகள் அவரை பற்றி எழுதி வருதை பார்த்து இருபிங்க.... ஆனால் அவரது அணுகு முறைகள் Shoko Asahara
வை என்னக்கு நினைவு படுத்துகிறது....


யார் இந்த shoko Asahara? ஜப்பான் இல் வாழந்த ஓர் மிக பெரிய சாமியார்.... இவர் நமது ஊர்களில் நித்தியானந்தா, சாய் பாபா, பிரமானந்தா போன்ற பல போலி சாமியார்களை தூக்கி சாப்பிட்டவர்..... இவர்களுக்கு எல்லாம் ஒரு வகையுள் தலைவர் போன்றவர்....

16 ஜூன், 2011

இவரை தெரிந்துகொள்வோம் - சே குவேரா


 

சே குவேரா:

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

திருக்குர்ஆன் அறிவியல்

திருக்குர்ஆன்

6:125. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்...லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.

செவ்வாய் கிரக சிறுவன்

தாடி எடுக்க அனுமதி உண்டா?



ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள்... நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (5892)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (435)
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.
ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3512)
எனவே தாடி வைப்பது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது.

கணவன்மார்களே! ♥ ♥ ♥


இது உங்களுக்குத்தான் .................. ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றத 01) மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அது சதகாவகும். 02) வீட்டினுள் நுழையும் போது ஸலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும்

15 ஜூன், 2011

கத்னா செய்வது கட்டாயக் கடமையா?

*கத்னா எனும் விருத்த சேதனம் செய்வது இறையன்பர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழக்கமாகத் துவக்கப்பட்டது என ஆதாரப் பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறியமுடிகிறது!

"(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3356, 6298, அஹ்மத்).
முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்துவர்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் பெரும் பாட்டனாராகிய இப்ராஹீம் (அலை) அவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றியே இன்றுவரை கத்னா செய்துகொள்வது வழக்கில் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பே மக்கத்துக் குரைஷியரும் மதீனாப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவந்த யூதர்களும் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையோராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்று நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

கத்னா செய்தல் இஸ்லாத்தில் கட்டாயக் கடமை என்று சொல்வதற்கில்லை. கத்னா செய்யாமலும் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து முஸ்லிமாக இருக்க முடியும். ஆயினும், கத்னா செய்வது வலியுறுத்தப்பட்ட ஓர் இயற்கை வழிமுறையாகும்.

"விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 5889, 5891, 6297, முஸ்லிம் 377, 378, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா மாலிக்)

அக்குள் முடி நீக்குதல், பாலின உறுப்புப் பகுதிகளின் முடி நீக்குதல், மீசையைக் கத்தரித்தல், நகங்களை வெட்டுதல் ஆகியவற்றை நாற்பது நாள்களுக்கு மேல் வளரவிடாமல் (முஸ்லிம் 379) நீக்குவதும் வெட்டுவதும் இயற்கை மரபு (இஸ்லாத்தின் மரபு) என இஸ்லாம் அறிவித்துள்ளது. எனவே, கத்னா எனும் விருத்த சேதனம் செய்தல் இயற்கை மரபாகும்! மற்றபடி கட்டாயம் கத்னா செய்தே ஆகவேண்டும் என்று இஸ்லாம் அறிவித்திடவில்லை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)
 
பி.கு:
*கத்னா என்பது (خِتَانُ) எனும் அரபுச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீக்குவது எனப் பொருள்.
புகாரீ ஹதீஸ் 6298இன் அறிவிப்பாளர் அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள், "கதூம் என்பது (சிரியாவிலுள்ள) ஓர் இடத்தின் பெயராகும்" எனக் கூறுகிறார்கள்.                                                                                                                                                                


































14 ஜூன், 2011

தமுமுக நிர்வாகிகள் மீதான பிடிவாரண்ட் ரத்து செய்தது நீதிமன்றம்

1997 ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவையில் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோயம்பத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி என்ற பெயரில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய மக்களிடம் நன்கொடை வசூலித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. முறையாக வருமானவரி துறையினர் கணக்கு சமர்பிக்கப்பட்டு அவர்கள் இது தொடர்பான விசாரணைகளை நடத்தி இந்த நிதியின் ஒவ்வொரு பைசாவும் முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப் பட்டு விட்டது என்று சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.

13 ஜூன், 2011

வார்தா ஆசிரமம்-மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை

 
 
 
Sevagram Ashram at Wardhaவார்தா: மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி திருடு போயுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – க வனம் – உஷார்.

 Quantcastகடந்த சில மாதங்களாக இப்படியான செய்திகள் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.
மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,.

தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

11 ஜூன், 2011

ஆளுனர் உரையின் மீதான விவாதத்தில் பங்கெடுத்த ஜவாஹிருல்லாஹ்


சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகவும் பலவீனமாக இருக்கும் இந்த தருணத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை ஜீவாதார பிரட்சனைகளை சட்டமன்றத்தில் ஒலிக்க களமிறங்கி இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது.

இரவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று முஸ்லிம்களின் பிரட்சனைகளை பேசுவதற்கு கூட பிறரிடம் அனுமதி பெற வேண்டிய நிலையை மாற்றி சொந்த சின்னத்தில் போட்டியிட்டு மனிதநேய மக்கள் கட்சி 2011 சட்டமன்ற தேர்தலில் சாதனை படைத்துள்ளது.

தேனாம்பேட்டையில் செக்ஸ் யோகா பயிற்சி: யோகா மையத்தில் ஆபாச சீடிகள்!

யோகா பயிற்சி மையத்தில் ஆபாச சிடிக்கள் சிக்கியதையடுத்து, வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டை சொக்கலிங்கம் நகரில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு செக்ஸ் கலந்து புதுவிதமாக யோகா பயிற்சி அளிக்கப்படுவதாக, தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புதுவிதமான யோகா பயிற்சி அளிப்பதற்காக நெதர்லாந்து, ருமேனியா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து 3 பெண்கள் உட்பட 7 பேர் வந்துள்ளனர்.
பயிற்சிக்காக சென்னை வந்துள்ள டென்மார்க்கைச் சேர்ந்த கணவன் & மனைவியான மிகாய் ஸ்பென்ஸ், அடினா ஆகியோர், ஏற்கனவே ஆபாச படத்தில் நடித்தவர்கள் என்றும் புகார் தெரிவிக்கப் பட்டது.

10 ஜூன், 2011

வன்முறையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்-ராம்தேவுக்கு ஹசாரே கண்டனம்

Anna Hazare

 
அகமது நகர்: நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளோம். வன்முறையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று காந்தியவாதி அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.

11 ஆயிரம் பேரைக் கொண்ட ஆயுதப் படையை அமைக்கப் போவதாக ராம்தேவ் கூறியுள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

ராம்தேவின் பேச்சால் அன்னா ஹஸாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பெரும் சங்கடமாகியுள்ளது. ராம்தேவின் அறிவிப்பு குறித்து அன்னாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செய்தியாளர்களிடம் அன்னா பேசுகையில், நான் வன்முறையை வெறுப்பவன். ஆயுதப் படையை உருவாக்குபவருடன் நான் ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டேன். நான் ராம்தேவை இப்போதைக்கு சந்திக்கவும் போவதில்லை. இதனால் எங்களது அமைதிப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படக் கூடும்.

நானும் சரி, ராம்தேவும் சரி ஊழலுக்கு எதிராக போராடி வருகிறோம். அதேசமயம், எங்களது போராட்டம் வன்முறைப் பாதையில் செல்லக் கூடியதல்ல.

வன்முறையின் மூலம் நாம் எதையும் சாதிக்க முடியாது. எங்களுடைய சுதந்திரப் போராட்டம் அகிம்சை வழியிலானது. ஊழலுக்கு எதிரான 2வது சுதந்திரப் போராட்டத்தை நான் அகிம்சை வழியில்தான் நடத்தப் போகிறேன்.

நாம் வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று விட்டோம். ஆனால் வறுமை, அநீதி, கருப்புப் பணம் ஆகியவை நம்மை விட்டுப் போகவில்லை. இந்த 2வது சுதந்திரப் போராட்டம் இவற்றை ஒழிக்க உதவும் என்றார் அன்னா.


   நன்றி.தஸ்தமிழ்

காட்டுமன்னார்கோவிலில் 75 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் அரசு வழங்கும் மண்ணெண்ணெயை கள்ள மார்க்கெட்டில் வாங்கியவரிடம் இருந்து 75 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோவில் பெரியார் நகர் எம்.ஆர்.கே., தெருவில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கடையில் அரசு விலையில் மண்ணெண்ணெய் வாங்கிய சிலரிடம் அதே இடத்தில் சற்று தள்ளி நின்று லிட்டர் 24 ரூபாய்க்கு கள்ள மார்க்கெட்டில் ஒருவர் வாங்கிக்கொண்டிருந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜாகீர் என்பவர் வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்தனர். அதிகாரிகளை கண்டவுடன் கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணையை வாங்கிக்கொண்டிருந்த நபர் தப்பி ஓடினார். அவர் விட்டுச் சென்ற 75 லிட்டர் மண்ணெண்ணெய், அளவு குடுவை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


 நன்றி. தினமலர்

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு விவரம்!



ஜூன் 10- ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும்; தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும்; விலைவாசியைக் கட்டுப்படுத்தவும்; தமிழ்நாட்டை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றவும் அயராது பாடுபடு...வேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகள் சொல்லி மாளாது. 

08 ஜூன், 2011

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!


"சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்" என்று இன்று காலை ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம். அதற்கு முகநூலில் பதிலளித்திருக்கும் பிஜேயின் ரசிகர்பட்டாளங்கள், தலைவன் எவ்வழியோ அவ்வழியை தவறாமல் கடைப்பிடிக்கும் தொண்டன்கள் அல்லவா? இந்த ரசிகர்கள் கூடட்டம். கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுடன் அர்ச்சனை செய்துள்ளார்கள்.

அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இதைப்பார்த்தவுடன் அவர்களின் அளவுக்கு அதே டென்சனில் பதில்வரும் என்று... அதுததான் இல்லை! அவர்களை பயிற்றுவித்தவரிடம் சில காலம் இருந்திருந்தாலும் நல்ல தலைவர்களின் வழிகாட்டலின் பாசரையில் பயின்றவர்கள் நாம். மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். கிரிமினல், திருட்டு, குறுக்குவழி போன்ற கீழ்த்தரமான சிந்தனைகள் நமக்குக்கிடையாது.

07 ஜூன், 2011

த.மு.மு.க., அலுவலகத்திற்கு தீ வைப்பு: போலீஸ் விசாரணை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் த.மு.மு.க., அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டம் நிலவியது. கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் முஸ்லிம் கருமாரத் தெருவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கூரை கொட்டகையை நேற்று முன்தினம் இரவு சில விஷமிகள் தீயிட்டு கொளுத்தினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்டு அவர்கள் தப்பியோடினர்.

06 ஜூன், 2011

உலகின் முதல் பறக்கும் ஹோட்டல்



உலகின் மிகப்பெரிய விமானமும் பறக்கும் சொகுசு ஹோட்டல் என்ற பெருமை பெற்ற இந்த ஹோட்டல் 2004 ம் ஆண்டு ரஷ்ய நிறுவத்திடமிருந்து வாங்கப்பட்டு கட்டுமான பணிகளுக்கு உட்படுத்தப் பட்டு பறக்கும் நட்சத்திர ஹோட்டலாக வடிவமைக்ப் பட்டது.

05 ஜூன், 2011

கீழக்கரையில் நன்றி சொல்ல சென்ற ஜவாஹிருல்லாஹ் மருத்துவமனையில் ஆய்வு!


பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நன்றி தெரிவிக்க வந்திருந்தார். யாரு்ம் எதிர்பாராத வகையில் கீழக்கரை அரசு மருத்துவமனையி்ல் ஆய்வு மேற்கொண்டார்.

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து,
ஜவாஹிர் ஹுசைன் உள்ளிட்ட டாக்டர்களிடம் ஆலோசனை செய்தார்.
108 ஆம்புலனசுக்கு அழைப்பு விடுத்தா்ல் அலட்சியப்படுத்துவதாக புகார் கூறப்பட்டது.

04 ஜூன், 2011

உண்ணாவிரத சாமியாரின் பின்னணி!....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...

டெல்லி உண்ணாவிரதம் அனைத்து தொலைகாட்சிகளும் நேரடி ஒளிபரப்பு மற்றும் பரபரப்பு....

நீங்களும் பாத்திரிபிங்க!.. யார் இந்த சாமியார்! பாபா ராம்தேவ் யோகா குரு! என்று அனைவாராலும் அழைக்கபடுபவர்.. இவர் வேலை யோக டீச்சர்!...

சமிபத்தில கூட. சில்பா ஷெட்டி வச்சு யோக சிடி வெளியிட்டார்.. நியாபகம் இருக்கா.. சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக அருவித்திருந்தார்...  

அதற்க்கு -காண தகுந்த நேரத்தை பாத்துகொண்டிருந்தார், 
 
திடிர்னு உழலுக்கும், கருப்பு பணத்துக்கும் எதிராக உண்ணாவிரதம் என்று அறிவித்தார் ... 

இந்த டூபாகூர் சாமியார்!...

03 ஜூன், 2011

முஸ்லிம்கள்:பழமைவாத அமைப்புகளும்… பலஹீனமான அரசியலும்…


தமிழ்நாடு,அஸ்ஸாம்,மேற்கு வங்காளம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்து அஸ்ஸாம் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பதிய அரசுகள் பதவியேற்றுள்ளன…
 
இவற்றுள் கடந்த ஐந்து மாநில பேரவைகளிலும் மொத்தமாக 105 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியில் இருந்துள்ளனர். தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தல்களில் ஐந்து மாநிலங்களிலும் மொத்தமாக 130 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வென்றுள்ளனர்… ஆக 25 முஸ்லிம்கள் அதிகமாக வென்று சட்டமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர்.

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம்

 




கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார்.

02 ஜூன், 2011

பாவப்பட்ட கோடீஸ்வரன்!


JUNE 2, பாபா ராம்தேவ் யார் இவர்? பிறந்தது ஹரியனாவில் உள்ள மகீன்றகர் மாவட்டத்தில்.

எழுதப்படிக்க தெரியாத ராம் நிவாஸ் யாதவ், குலாப் தேவி, தம்பதிகளின் ஏழை மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

ராம கிருஷ்ணா பாபாவாக என்ற இயற்பெயரோடு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

சமஸ்கிருதமும், யோகாவும் படித்து சந்நியாசியாக மாறினார். இன்று ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதியாக மாறி பாபா ராம் தேவாக உருமாறினார்.

நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்!!


*  நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

*  நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

01 ஜூன், 2011

செல்போன்களால் கேன்சர் அபாயம் : உலக சுகாதார மையம் எச்சரிக்கை

 
ஜெனிவா : செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.