தமிழக சட்டசபை முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்களான ம.ம.க.,வைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, அஸ்லாம் பாட்ஷா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முகமது ஜான் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோரைப் பாராட்டி விழாவில் பலர் பேசினர். ம.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் விழாவில் பங்கேற்றனர். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முகமது ஜான், அமைச்சராக அறிவிக்கப்பட்டதால், அலுவல் காரணமாக அவரும், அப்துல் ரஹீமும் பங்கேற்கவில்லை.
விழாவில், ம.ம.க., ஜவாஹிருல்லா ஏற்புரையாற்றியதாவது: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இக்கட்டான காலத்தில் 1995ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான். சுனாமி பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம். பின், மனிதநேய மக்கள் கட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, அனைத்து சமுதாய மக்களுக்கும் பாடுபடுகிறோம். இந்த தேர்தலில் ம.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி, கட்சியினரின் உழைப்புக்கும், பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் கிடைத்த அங்கீகாரம். எனவே, முஸ்லிம் அமைப்புகள் அனைவரும் எங்களோடு இணையுங்கள்; உங்கள் அனைவருக்கும் பாடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.
நன்றி. தினமலர்
"இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான்" என்று இந்த ஆள் பொய் சொல்வதற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இந்தியாவிலே அதிக அளவில் ரத்ததானம் செய்த முஸ்லிம் அமைப்பும்,தமிழ் நாட்டிலே அதிக அளவில் ரத்ததானம் செய்த முதன்மை அமைப்பும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது சகல சுயமாக சிந்திக்க கூடிய ஒவ்வொருத்தருக்கும் தனியார்,அரச நிறுவனக்களுக்கு தெரியும் அதற்காக அவர்கள் பெற்று கொண்ட சான்றுகளும் உள்ளது.
பதிலளிநீக்கு