சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகவும் பலவீனமாக இருக்கும் இந்த தருணத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை ஜீவாதார பிரட்சனைகளை சட்டமன்றத்தில் ஒலிக்க களமிறங்கி இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது.
இரவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று முஸ்லிம்களின் பிரட்சனைகளை பேசுவதற்கு கூட பிறரிடம் அனுமதி பெற வேண்டிய நிலையை மாற்றி சொந்த சின்னத்தில் போட்டியிட்டு மனிதநேய மக்கள் கட்சி 2011 சட்டமன்ற தேர்தலில் சாதனை படைத்துள்ளது.
கறுப்பு தொப்பி அணிந்த இரண்டு மமக சட்டமன்ற உறுப்பினர்களில் இராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லாஹ், கவர்னர் உரையின் மீதான விவாதத்தில் பங்கெடுத்தார். பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யும் சட்டம், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
இஸ்லாமியர்களின் திருணங்கள் ஜமாத்துக்களில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த திருமணங்கள் கட்டாய பதிவு என்கிற சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இதுகுறித்த கோரிக்கையை அப்போதைய திமுக அரசிடம் வைத்தோம். ஆனால் நிராகரித்து விட்டது.
திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. ஆனால், பதிவுக்கான விதிமுறைகளை எதிர்க்கிறோம். எந்தக் குறிப்பாணையும் இல்லாமல் ஜமாத்துக்களின் சான்றுகளை வைத்துக் கொண்டு திருமணங்களை பதிவு செய்திட வேண்டும் என்று பேராசிரியர் தனது பேச்சை தொடர, அமைச்சர் கோகுல இந்திரா (குறுக்கிட்டு): திருமண பதிவு சம்பந்தமாக உறுப்பினர் சில கோரிக்கைகளை வைத்தார். அவரது கோரிக்கையை விளக்கமாக எங்களிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதல்அமைச்சர் ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்றார்.
தொடர்ந்து பேராசிரியர் பேசுகையில், ''இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 10,400 பேர் அரசிடம் விண்ணப்பித்தனர். ஆனால், இதில் 3 ஆயிரம் பேருக்குத்தான் ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தது. எனவே, மீதமுள்ளவர்களில் பாதி பேருக்காவது அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையை ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தனது நன்றி உரையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றிTMMK-ksa
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக