அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
30 ஜூன், 2011
சிங்கப்பூரில் செயற்கை முறையில் உருவாகும் ராட்சத மர பூங்கா
சிங்கப்பூரில் செயற்கை முறையில் ராட்சத வடிவ மரங்கள் கொண்ட பூங்கா ஒன்று உருவாகிறது. இதற்காக 20 முதல் 85 டன்கள் எடை கொண்ட உலோக சட்டங்களை பயன்படுத்தி வானை தொடும் உயரத்தில் மரத்தின் அடிப்பாகம் நிறுவப்படுகின்றது. பின், அதனுடன் ஆயிரக்கணக்கான இரும்பு கம்பிகள் கொண்டு மரக்கிளைகள் வடிவமைக்கப்படுகின்றன. சுமார் 50 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக காட்சி தரும் இவற்றில் 7 மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சூரிய தகடுகள் பொருத்தப்படுகின்றன. இதனால் செயற்கை முறையில் இரவிலும் ஒளியை பெறலாம். மேலும் உலகில் காணப்படும் பல்வேறு வகை செடிகளும் மரங்களின் உள்ளே இடம் பெறுகின்றன. இவை சிங்கப்பூரில் நடைபெறும் பூங்கா திருவிழாவின் போது அமர்க்களமாக காட்சி தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக