#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 ஜூன், 2011

பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை !



( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும்.
புனிதமான நம் மான,மரியாதையை அல்லாஹ் காப்பாற்றுவானாக..)

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதே வேலையில் மறுபுறம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது.

எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும் ஆனால் இன்றைய உலகின் எதார்த்தம் அப்படியே தலைகீழாக இருக்கிறது.

தன் சக மனிதனுக்கு கேடுவிளைப்பதையே தன் தினத்தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கிவிட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தொலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.  

நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கு தெரியாமல் உங்களின் ஒவ்வொரு அசைவையும் ஒருவன் கண்காணிக்கிறான் என்றால் உங்களால் சாதாரணமாக இருக்க முடியுமா.. ? .. ம்ம முடியும்.. என்னென்றால் அவன் கண்காணிப்பது உங்களுக்கே தெரியாதே...!!

ஒரு அதிர்ச்சியான உண்மை நீங்கள் பெண்களாய் இருந்தால் இந்த கட்டுரை உங்களை பற்றியது தான் கவனமாக படியுங்கள்

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது.

இதை எத்தனை பேர் நல்லவிஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியே மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும் ,தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் இன்ஷாஅல்லாஹ் விரிவாக காண்போம். 

ரகசிய கேமராக்கள் : 

ரகசிய கேமராக்களில் பலவிதங்கள் இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எந்த பொருளை நினைகிரீர்களோ அதை எடுத்துகொல்லுங்கள் அதில் கேமராவை பொருத்தி கண்காணிக்க முடியும் ! என்றால் பார்த்துகொல்லுங்களேன்.
  
காலனியை போல் 


பேனாவை போல்..
கண்ணாடி போல்.. 


பொது இடங்களில் கேமிராக்கள் :




பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். 

கேமராவுடன் உள்ள அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியா வண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் பெரும் அளவில் பெருகிவிட்டனர்.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :





பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள்அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சில மாணவிகளே தன் சக மாணவிகளின் அந்தரங்க விஷயங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. எனவே விடுதியில் தங்கும் மாணவிகள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

சமீபத்தில் ஒரு கல்லூரி விடுதியில் தன் காதலனுக்கு காண்பிப்பதற்காக விடுதி கழிவறையில் கேமரா பொருத்தி ஒரு பெண் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :





பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை,குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

அதுமட்டுமின்றி தேன்நிலவு செல்லும் ஜோடிகளை குறிவைத்து ஹோட்டல் ரூம்களில், கழிவறையில் கேமராக்கள் பொருத்தும்  கும்பலும் அதிகரித்துள்ளது.ஆதலால் முதலில் வெளி இடங்களில் எங்கு தங்கினாலும் ,நம்மை யாரும் திருட்டுத்தனமாக கண்காணிகிறார்களா என்பதை நாம் முதலில் கண்காணிக்க வேண்டும்.


ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும்விடுதியா என்று முடிந்தவரை உறுதிசெய்து கொள்ளவேண்டும். மேலும் அதை போல் குற்றால சீசனுக்கு குளிக்க செல்லும் குடும்ப பெண்களை செல்போன், கேமரா மூலமாக படமெடுக்கும் சம்பவங்களுக்கும் நடைபெற்றுவருகிறது.குற்றாலத்தை பொருத்தவரை அது பெண்கள் குளிக்க பாதுகாப்பான இடமல்ல என்பதை ஆண்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

பாதுகாப்பு காரணம் என்று கூறிக்கொண்டு உயர்ந்த இடத்தில் உட்காந்து கொண்டு போலீசாரே குளிக்கும் பெண்களை பார்த்து ஜொள்ளுவிடும் கொடுமையும் குற்றாலத்தில் நடக்கிறது.



நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பேருந்துப் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பேருந்துப் பயணம் செய்யும் போது அந்தப் பேருந்துகள் ஊருக்கு வெளிப்புறங்களில் உள்ள உணவங்களில் நிறுத்தப்படுகின்றன அல்லவா?

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் அக்தகைய உணவங்களில் உள்ள கழிவறையைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள கழிவறைகளில் வீடியோ கேமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர் இந்தக் கோணல் புத்திக்காரர்கள்.

கழிவறைகளின் மேலே உள்ளே விளக்குகிலோ அல்லது சுவற்றில் இருக்கும் குழாயிலோ அல்லது கழிவறையின் கதவிலோ இந்த வீடியோக் கேமராக்களைப் பொருத்தி விடுகின்றனர் இந்தக் கொடூரர்கள்.

இந்தப் படு பாதக சதிச் செயலைப் பற்றி ஏதும் அறியாமல் பேருந்தில் வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள அந்தக் கழிவறையை பயன்படுத்தி விடுகின்றனர்.

அங்கே மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக அந்தப் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்த அந்தக் கும்பல் அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர்.

பெண் பித்தும், பணத்தாசையும் பிடித்த இந்தக் கொடுரக் கூட்டம் பெண்களின் ஆபாச வீடியோவை சிடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம்வரை கொண்டு சென்றும் பணம் பார்த்து விடுகின்றனர்.

கழிவறைக்குள் வைத்து திருட்டுத் தனமாக படம் பிடிக்கப் படும் இந்த ஆபாசக் காட்சிகளை எந்த அருவருப்பும் இல்லாமல் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருப்பது அதை விட வேதனையான விஷயம்.

இந்த ஆபாசக் காட்சிகளை தங்கள் அலைபேசிகளில் ஏற்றிக் கொண்டு அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது.

இப்படிக் கூட அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவார்களா என்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த அவலச் செயல் எப்படிக் கண்டு பிடிக்கப் பட்டது என்றால்,

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் கார்ப்பரேஷன் பாத்ரூமில் ஓணம் பண்டிகைக்கு பாத்ரூமை வெள்ளை அடித்து சுத்தம் செய்யும்போது பெண்கள் பாத்ரூமில் 9 இடத்தில் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

கேமராவை கழிவறையின் மேலே தொங்கும் மின்விளக்கில் பொருத்தி படம் பிடித்து வந்து உள்ளனர்.

இதை அறிந்த கேரளா பிரஜா என்ற பெண்கள் அமைப்பினர் அந்தக் கழிவறையைப் பூட்டி பெரும் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய அந்தப் பரபரப்பினால் தான் இக்தகைய ஒரு கொடுஞ்செயல்  வெளியில் தெரியவந்து உள்ளது.


இது கேரளாவில் தானே நடந்தது என்று நாம் சாதாரணமாக எண்ணிக் கொள்ளக் கூடாது, இந்தப் பேருந்து நிலைய சம்பவம் நமக்கு ஒரு உதாரணம்தான், அங்கே செய்தவர்கள் அகப் பட்டுக் கொண்டார்கள், இன்னும் அகப்படாதோர் எத்தனையோ.

நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் இது போலக் கழிவறையில் கேமரா வைத்துப் படம் பிடிக்கப் பட்ட சம்பவம் வெளியில் தெரிந்து பரபரப்பை ஏற்படுத்த வில்லையா?

இது போல இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை வக்கிரர்கள் இந்த செயலை செய்து வருகின்றனரோ?எத்தனை அப்பாவிப் பெண்களின் அந்தரங்கங்கள் கொடூரர்களின் கண்களுக்கு விருந்தாக்கப் பட்டதோ?இந்தப் படு பாதக செயல்களுக்கு யார் யார் உடந்தையாக இருக்கின்றனரோ? தெரியவில்லை.

இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல போது இடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்த்து விடலாம் அல்லவா?.

அப்படியே அந்தக் கழிவறையைப் பயன் படுத்த வேண்டிய காட்டாய சூழல் என்றாலும் கூட இது போன்ற வக்கிரங்கள் எதுவும் கழிவறையினுள் இருக்கின்றனவா என்பதை சோதித்து நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பின்னர் பயன்படுத்தலாம்.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :






மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், 

மருத்துவமனைகளில்டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களைஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.


துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்குபொருத்தப்பட்டிருக்கும் கேமிராவும் ,கண்ணாடிகளும் :






நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும்,வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறதுஎன்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை :

TRAIL ROOMல் இருந்துகொண்டு  செல்போன் மூலமாக யாருகாகவாவது CALL செய்து பார்க்கவேண்டும். உங்கள் அழைப்பு நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த ரூமில் ரகசிய கேமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும்  CALL செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கேமரா இருப்பது உறுதி என்று ELECTRONIC பொறியாளர்கள் கூறுகிறார்கள்.

TRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை ....





இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மைபிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள்  செயல்பட வேண்டும் 


இவைகளை சுலபமாக கண்டறியும் முறை : 
உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி , ஒரு வேலை இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம். 



TWO WAY MIRROR IMAGE


FACEBOOK புகைப்படங்களும் PHOTOSHOP உக்தியும் :
 
இது போதாது என்று FACEBOOK-TWITTER-ORKUT போன்ற தளங்களில் பல  பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOAD செய்து இருகிறார்கள் அதை தேடி டவுன்லோட் செய்துகொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போஸ்டரோடு இணைத்து ,அதை இன்டர்நெட்டில் விற்று காசு பார்கிறது மற்றொரு வக்கிர சைகோ கூட்டம்...


பெண்களிடம் facebook போன்ற பொதுத்தளங்களில் PHOTOக்களை UPLOAD செய்ய வேண்டாம் என்றால்.. அதற்க்கு பல பெண்கள் இது எங்கள் உரிமை அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு நாம் சொல்வதை கேட்பதில்லை.. இறுதியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறிவைத்தே நடந்து வருகிறது.அப்பாவியான பலபெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள். 


இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப்- பர்தா அணியும் இஸ்லாமிய பெண்கள் 80% இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள் இன்ஷாஅல்லாஹ் இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை ஏனெனில் ஹோட்டல் , தங்கும் விடுதியில் இருக்கும் படுக்கை அறை,கழிவறை போன்ற இடங்களில் இந்த கயவர்களின் கைவரிசை இருக்கலாம் ஆதலால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...


எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபடமுடியாது , எல்லா இடங்களையும் இது நம்பகமானது  என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்..


ஆண்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப் பெண்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மிக அத்தியாவசிய தேவை , அவசரம் என்றால் மட்டுமே பொது குளியலறை ,கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும்.


ரகசிய கேமராக்களை கண்டறியும் கருவி : 


இந்த ரகசிய கேமராக்களை துல்லியமாக கண்டறிய வேண்டும் என்றால் அதற்கும் நாம் தொழில்நுட்பத்தை நாடவேண்டியுள்ளது.ரகசிய கேமிராக்கள் கண்டறியும் கருவியும் இருக்கிறது. இதன் மூலம் நம்மை சுற்றி யாரும் படமேடுகிறார்கள் என்பதை கண்டுகொள்ள முடியும். ஆனால் தற்போது இந்த கருவிகளின் விலை மிக அதிகமாக இருக்கிறது.






நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:

இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும்,
உடமையும், மானமும், மரியாதையும் புனிதமானவை என்றார்கள்....
(புகாரி 67)
------------------------------------------------------------------------------------------------------------


மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)
நன்றி.நாகூர் ஃப்ளாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக