அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
18 ஜூன், 2011
ஆசைகளைத் துறந்தவர் என்று நம்பப்பட்ட சாமியார் அறையில் 12 கோடி ரூபாய் பணம், 98 கிலோ தங்கம்
சமீபத்தில் காலமான புட்டபர்த்தி சாய்பாபாவின் அறையில் சுமார் 12 கோடி ரூபாய் பணமும், 98 கிலோ தங்கமும், சுமார் 300 கிலோ வெள்ளியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சாய் பாபா காலமானது முதல் பூட்டி இருந்த அவருடைய தனி இருப்பிடமான யஜுர் மந்திர் திறக்கப்பட்ட பொழுது இவ்வாறு தங்கமும், வெள்ளியும், ரொக்கப் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புட்டபர்த்தியை சேர்ந்த 'முற்றும் துறந்த' முனிவர் சாய்பாபா. ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் தலைமை ஆசிரமத்தைக் கொண்ட இந்த சாமியாருக்கு உலகம் முழுவதும் ஆசிரமக் கிளைகள் உள்ளன. இவருடைய டிரஸ்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துக்கள் உண்டு. இவர் புட்டபர்த்தியில் தன்னுடைய ஆசிரம வளாகத்தில் இருந்த யஜுர் மந்திர் என்ற தனி இருப்பிடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் சாய் பாபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால், அவருடைய யஜுர் மந்திர் பூட்டப்பட்டது.
மருத்துவமனையில் சில வாரங்கள் சிகிச்சை பெற்று வந்த சாய் பாபா, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அதன் பின்னர் அவருடைய யஜுர் மந்திர் திறக்கப்பட்டு, அதற்குள் இருக்கும் பொருட்கள் கணக்கிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக இருந்து வந்தது. யஜுர் மந்திருக்குள் வெகு சிலரே அனுமதிக்கப்பட்டதால், அதற்குள் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பக்தர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர், டிரஸ்ட் உறுப்பினர்கள், சாய்பாபாவின் தனி உதவியாளர், வருமானவரித்துறை ஊழியர்கள் ஆகியோர் முன்னிலையில் யஜுர் மந்திர் திறக்கப்பட்டது.
அப்பொழுது, யஜுர் மந்திரில் சுமார் பன்னிரண்டு கோடிகள் ரொக்கப்பணமும், 98 கிலோ தங்கமும், 300 கிலோ வெள்ளியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட ரொக்கப்பணம் சாய்பாபா டிரஸ்ட் பெயரில் வங்கியில் போடப்பட்டது. ஆசைகளைத் துறந்தவர் என்று நம்பப்பட்ட சாமியார் ஒருவரின் தனி அறையில் இவ்வளவு பணமும், தங்கமும், வெள்ளியும் இருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக