அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
18 ஜூன், 2011
வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
காட்டுமன்னார்கோவில் : டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கடலூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்ட காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூரில் இருந்து கடந்த 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டு கீழணைக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் வருகிறது. கடலூர் மாவட்டம், கொள்ளிடம் பாலம் பணி நடப்பதால் அங்கு தண்ணீர் அதிக அளவில் தேக்காமல் வடவாறு வழியாக வீராணத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
வீராணத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் ருத்ரசோலை மதகு வழியாக நேற்று மதியம் வீராணம் ஏரிக்குள் சீறிப்பாய்ந்து செல்கிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளக்கும் வீராணம் கோடை காலங்களில் தண்ணீர் வற்றி பாலைவனமாக மாறிவிடும்.ஆனால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதையொட்டி கடந்த சில ஆண்டுகளாகவே வீராணம் வற்றாமல் கோடையிலும் தண்ணீர் இருந்து வந்தது. தற்போது கொள்ளிடம் அணை பலப்படுத்தும் பணிக்காக மண் எடுப்பதால் தண்ணீர் தேக்காமல் வறண்டு கிடந்த வீராணத்தில் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வீராணத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் கொள்ளிடம் அணை பலப்படுத்தும் பணிக்காக தற்போது வீராணம் மேற்கு கரை பகுதியில் மண் எடுக்கப்படுகிறது.
நன்றி. தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக