#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

11 ஜூன், 2011

தேனாம்பேட்டையில் செக்ஸ் யோகா பயிற்சி: யோகா மையத்தில் ஆபாச சீடிகள்!

யோகா பயிற்சி மையத்தில் ஆபாச சிடிக்கள் சிக்கியதையடுத்து, வெளிநாட்டைச் சேர்ந்த 7 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டை சொக்கலிங்கம் நகரில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு செக்ஸ் கலந்து புதுவிதமாக யோகா பயிற்சி அளிக்கப்படுவதாக, தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புதுவிதமான யோகா பயிற்சி அளிப்பதற்காக நெதர்லாந்து, ருமேனியா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து 3 பெண்கள் உட்பட 7 பேர் வந்துள்ளனர்.
பயிற்சிக்காக சென்னை வந்துள்ள டென்மார்க்கைச் சேர்ந்த கணவன் & மனைவியான மிகாய் ஸ்பென்ஸ், அடினா ஆகியோர், ஏற்கனவே ஆபாச படத்தில் நடித்தவர்கள் என்றும் புகார் தெரிவிக்கப் பட்டது.

வழக்குப்பதிவு செய்தபோலீசார், 7 வெளிநாட்டினரையும் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
அந்த 7 பேரும் யோகா மையத்தை பூட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து, அங்கு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது மறைத்து வைத்திருந்த ஏராளமான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைத்தும் ஆபாச சிடிக்கள் என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், யோகா மையத்துக்கு பூட்டு போட்டனர். தலைமறைவான வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலாங்கரை மையத்தில் ‘தாந்திர கிளவ்’ யோகா
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த யோகா மையம் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு பெயரில் இயங்கி வருகிறது. சென்னைக்கு வந்து கடந்த 2 ஆண்டுகள் தான் ஆகிறது. தேனாம்பேட்டையில் வாடகை வீட்டில் செயல்பட்டது.
அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி விட்டோம். அவர்கள் பற்றி விவரங்களை சேகரித்து வருகிறோம்.
இந்த மையத்தில் பயிற்சி அளிக்கும் 7 பேரும் தனித்தனியாக வெப்சைட் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதன்மூலம் விளம்பரப்படுத்தி மையத்துக்கு வாடிக்கையாளர்களை இழுக்கிறார்கள்.
செக்ஸ் கலந்த யோகா பயிற்சிக்கு ‘தாந்திர கிளவ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் சேரும்போது முதலில் ஒரு மாதத்துக்கு இலவசமாக கற்றுத் தரப்படும். அதற்கு அடுத்த மாதத்தில் இருந்துதான் பணம் வசூலிக்கப்படுகிறது. 12 மாதங்கள் பயிற்சி எடுத்த பிறகுதான் ‘தாந்திர கிளவ்’ யோகா கற்றுத் தரப்படுகிறது.
அதுவும் நீலாங்கரை மையத்தில்தான் சொல்லித் தரப்படும். தற்போது, அந்த 7 பேரும் வெளிநாட்டிற்கு தப்பி விடாமல் இருக்க பாஸ்போர்ட்டை முடக்க முயற்சித்து வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்


நன்றி.வியப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக