அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 மார்ச், 2011
“செக்ஸ்” புகாரில் சிக்கிய இந்து மத சாமியாருக்கு 14 ஆண்டு ஜெயில்; அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி (82). இந்துமத சாமியாரான இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்கு ஆஸ்டின் நகரில் 200 ஏக்கரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரை “சுவாமிஜி” என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இவர் மீது 2 பெண்கள் செக்ஸ் புகார் கூறி இருந்தனர்.
அவர்கள் இருவரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். “டீன்ஏஜ்” பருவத்தில் இருந்தபோது, அதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி இவர்களுடன் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டதாக புகார் செய்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஹீல்டன் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ராம்சே குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி சுவாமிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.90 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக