அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
31 மார்ச், 2011
திமுக நபரால் சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சென்னை பாரி முனையில் இமேஜ் ஆப்டிகல் என்ற கட்டிடத்தின் மேல் பல வருடங்களாக அப்பகுதி வியபாரிகளுக்காக தொழுகைப் பள்ளி ஒன்று நடை பெற்று வருகிறது! அதை அந்த கட்டிட உரிமையாளர் பள்ளிக்கென வக்பு செய்து ,விற்றாலோ அவரது வாரிசுகளோ உரிமை கொண்டாடக் கூடாது என சொல்லி தான் அந்த சொத்தை விற்றுள்ளார். ஆனால் வாங்கிய திமுக வடச்சென்னை மாவட்ட செயலாளர் பாபுவின் அண்ணன் மகனாகிய சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர் சீனிவாசன் எனும் தி.மு.க நபர் அதை மதிக்காமல் இரவோடு இரவாக தொழுகை பாய் , குரான் போன்றவற்றை தூக்கி எறிந்து பள்ளியை இடிக்க துவங்கியுள்ளனர். மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவருக்கம் தகவல் தர
விஷயமறிந்த த.மு.மு.க த.த.ஜ INTJ SDPI .சகோதரர்கள் அனைவரும் வர பொது மக்களோடு அனைவரும் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். நிலைமை
கேள்வி பட்டு எஸ்,எம்.பாக்கர் நேரடியாக களத்திற்கு சென்று உதவி ஆணையர் சேஷ சாயி அவர்களிடம் பேசினார். பின்னர் சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பள்ளி மீண்டும் அசர் தொழுகை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது!
பாபர் பள்ளிக்கு பின் இனியொரு பள்ளியை இந்த சமுதாயம் தயாராக இல்லை என்பதையும் , அதற்காக கருத்து வேறுபாடு மறந்து அனைத்து இயக்கங்களும் கை கோர்த்து காலத்தில் இறங்குவார்கள் என்பதையும் நாட்டுக்கு எடுத்துரைப்பதாக இந்த சம்பவம் அமைந்தது!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக