#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

18 மார்ச், 2011

பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது; கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு

 
மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
கூட்டணி கட்சி தலைவர்களை ஜெயலலிதா நேற்று சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து கூட்டணியில் உருவாகி இருந்த சிக்கல் தீர்ந்தது. இந்திய கம்யூனிஸ்டு உள்பட 7 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.
 
கட்சிகள் அதிர்ச்சி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டது. இதில், ம.தி.மு.க.வை தவிர, மற்ற அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டது.
 
ம.தி.மு.க.வுக்கு 8, 9 என்ற அளவில் மட்டுமே தொகுதிகள் தரமுடியும் என்று கோரப்பட்டதால், ம.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தகட்டமாக மற்ற கட்சிகளுடன் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, மீதியுள்ள 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், கடந்த 16-ந் தேதி இரவு திடீர் என்று வெளியிடப்பட்டது. இதில், கூட்டணி கட்சிகள் கேட்டிருந்த தொகுதிகளுக்கும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், கூட்டணி கட்சிகளுக்கிடையே அதிருப்தி ஏற்பட்டது.
 
இந்த நிலையில், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் விஜயகாந்தின் தே.மு.தி.க. அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில், அ.தி.மு.க. தலைமையுடன் பேசி முடிவெடுக்க ஒரு நாள் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
 
இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 3-வது அணி உருவாகலாம் என்றும் கூறப்பட்டது.   இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை சமரசம் செய்யும் பணிகள் தொடங்கியது.
 
நேற்று காலையும் இந்த சமரச பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் எம்.பி. ஆகியோர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு வந்தனர்.
 
அவர்களைத்தொடர்ந்து கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். இரவு 7 மணிக்கு தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வந்தனர்.
 
இறுதியாக 7.35 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் போயஸ்கார்டனுக்கு வந்தனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.  
 
போயஸ் கார்டனில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில், இரவு 10.30 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியே வந்தார். பேச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு, பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. தலைமை வெளியிடும் என்றும் அவர் பதில் அளித்தார்.
 
அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் நேற்று இரவு 11 மணியளவில் வெளியிடப்பட்டன.
 
தொகுதிகள் விவரம் வருமாறு:-1. திருத்துறைப்பூண்டி (தனி) 2. சிவகங்கை 3. தளி, 4. குடியாத்தம் (தனி) 5. பெண்ணாகரம், 6.புதுக்கோட்டை, 7. வால்பாறை (தனி), 8. பவானிசாகர் (தனி) 9. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 10. குன்னூர். தா.பாண்டியனை தொடர்ந்து பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் வெளியே வந்தார்.
 
அவர் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் 5 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று இரவு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் ந.சேதுராமன் மற்றும் நிர்வாகிகள், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் டாக்டர் செ.கு.தமிழரசன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் உ.தனியரசு மற்றும் நிர்வாகிகள் தனித்தனியே நேரில் சந்தித்தனர்.
 
அப்போது, 13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
 
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் திருச்சுழி தொகுதியில் போட்டியிடுவது என்றும், இந்திய குடியரசு கட்சி கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) (கே.வி.குப்பம்) தொகுதியில் போட்டியிடுவது என்றும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பரமத்தி-வேலூர் தொகுதியில் போட்டியிடுவது என்றும், ச.ம. கட்சி தென்காசி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் ஒப்பந்தம் ஆனது.
 
இந்த நிகழ்ச்சியின்போது, அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக