இந்த தொகுதிகள் மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற, கட்சித் தொண்டர்கள் பாடுபடுவர். தி.மு.க., ஆட்சியால், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரசாரம் செய்வோம்.அ.தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி, சிறிது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது; கூட்டணியில், ம.தி.மு.க., இடம் பெறாதது துரதிஷ்டவசமானது. முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்; அமல்படுத்துவதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஏராளமான இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; இத்திட்டங்கள், மனிதனை சோம்பேறியாக்கி விடும்; மேலும், கடத்தலுக்கு வழிவகுக்கும். இலவச திட்டங்களால், தமிழகத்தின் கடன், ஒரு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., உடனான கூட்டணி, தேர்தல் கூட்டணி மட்டுமே; கொள்கை கூட்டணியில்லை.இவ்வாறு, உமர் ஹாஜி கூறினார்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக