அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
16 மார்ச், 2011
சாதிக் பாட்சா மர்ம மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் நியமிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழ-ல் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரும் அவரது பினாமி என்று சொல்லப்பட்டவருமான சாதிக் பாட்சா மர்ம மரணம் அடைந்திருப்பது தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இது தற்கொலை என்று கூறப்படுவதை நாட்டு மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் முதல் குற்றவாளியான ஆ.ராசாவும், தமிழக முதல்வரின் குடும்பத்தினரும் விசாரணையை எதிர்கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கும் போது, பினாமியான சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த மரணத்தில் பயங்கரமான பின்னணியும், உண்மைகளை சாகடிக்கும் முயற்சியும் இருக்கிறதோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே, சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக