அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
23 மார்ச், 2011
கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
துபாய் : துபாய் அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் சிறு சேமிப்பு திட்டத்தின் குலுக்கலில் ஐந்து வயது இந்திய சிறுவனுக்கு மில்லியன் திர்ஹம்கள் (சுமார் ஒன்றே கால் கோடி இந்திய ரூபாய்கள்) கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் சில வருடங்களுக்கு முன் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை பிரபலப்படுத்த அரசாங்க ஆதரவுடன் சில நிறுவனங்கள் நேஷனல் பாண்ட்ஸ் எனும் திட்டத்தை ஆரம்பித்தன. இதில் சிறு தொகை கூட யார் வேண்டுமானாலும் மாதந்தோறும் கட்டலாம். இத்தொகை முஸ்லீம்களின் மதமான இஸ்லாம் அனுமதித்த தொழில்களில் முதலீடு செய்யப்பட்டு லாபம் பகிர்ந்தளிக்கப்படும். மேலும் மாதந்தோறும் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மில்லியன் அமீரக திர்ஹம்கள் வழங்கப்படுவார். பிப்ரவரி 2011க்கான குலுக்கலில் இப்ராஹிம் பஹூமுதீன் ஷேக் எனும் ஐந்து வயது இந்திய சிறுவனுக்கு பரிசு கிடைத்துள்ளது. முதலில் இப்பரிசு குறித்து தொலைபேசியில் செய்தி கிடைத்த போது இப்ராஹிமின் தந்தை ஏதோ சில நிறுவனங்கள் பணம் பறிக்க செய்யும் உபாயம் என்று நினைத்தார். பின் தான் உண்மையிலேயே நேஷனல் பாண்ட்ஸ் சேர்மனுடன் பேசுகிறோம் என்பதை உணர்ந்தார். பரிசு பணமான கோடி ரூபாயை கொண்டு தான் கேண்டியும் இனிப்பும் வாங்குவேன் என்றும் தன் தந்தை போல் பணத்தை சேமிப்பேன் என்றும் ஐந்து வயது இப்ராஹீம் தெரிவித்தான். இது வரை இக்குலுக்கலில் கோடீஸ்வரர்களாக ஆனவர்களில் 63 சதவிகிதம் நபர்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக