அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
04 மார்ச், 2011
வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்
வீராணம் ஏரி.
சிதம்பரம், மார்ச் 4: கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ÷கீழணை உள்ள அணைக்கரையிலிருந்து சின்னகாரமேடு வரை ரூ.108 கோடி செலவில் கொள்ளிடக்கரை அகலப்படுத்தி பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கீழணை பாலம் மற்றும் ஷட்டர் சீரமைப்பு பணியும் நடைபெற்று வருகிறது. கொள்ளிட்டக்கரையை பலப்படுத்த வீராணம் ஏரியிலிருந்து மண் எடுக்கப்படுகிறது. ÷இதனால் கீழணையிலிருந்து வீராணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டும் வியாழக்கிழமை நிலவரப்படி 39.70 அடியாக குறைந்தது (மொத்தக் கொள்ளளவு 47.50). ÷ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த வாரம் வரை சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 20 கனஅடி அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. தற்போது மேலும் நீர் குறைந்ததால் சேத்தியாத்தோப்பு அருகே நெடுமாடத்தின் வழியாக ஏரியிலிருந்து நீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் வியாழக்கிழமை முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. ÷இருப்பினும் பண்ருட்டி, வடலூர் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் பம்பு செய்யப்பட்டு சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக