நன்றி.தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
04 மார்ச், 2011
அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம்
புனே:இதுநாள் வரையில் மவுனமொழியாக கம்ப்யூட்டருடன் பேசிக் கொண்டிருந்த நாம் இனிவரும் காலங்களில் நமக்கு தெரிந்த மொழிகளில் பேசி பழகலாம்.அதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான முயற்சியை சி-டாக்(சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் என்ற அமைப்பு எடுத்து வருகிறது. இந்த அமைப்பின் இத்தகைய முயற்சிக்காக மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரகம் நிதியுதவி அளித்து வருகிறது.இந்த அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஹேமந்த் தர்பாரி கூறியதாவது: இவை இரண்டு முறைகளில் செயல்பட உள்ளது.ஸ்பீச் டு டெக்ஸ்ட் முறையிலும் டெக்ஸ்ட் டு ஸ்பீச் முறையிலும் செயல்பட உள்ளது. இதற்காக பயனாளிகள் கம்ப்யூட்டர் முன்னர் உட்கார்ந்து பேசும் போது அக் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர்கள்பேச்சை டெக்ஸ்ட்டாக மாற்றி தேவையான தகவல்களை திரட்டிய பின்னர் மீண்டும் அவை பேச்சாக தெரிவிக்கின்றன. இத்தகைய கம்ப்யூட்டர்கள் ஊரகப்பகுதிகளில் அதிகளில் பயன்படும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். காரணம் என்னவெனில்ஊரகப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மொழிகளுக்கு ஏற்ப கம்ப்யூட்டர்களின் கீபோர்டுகளை வடிவமைக்க முடியாது.எனவே இந்த வாய்ஸ் கம்ப்யூட்டர் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என நம்புவதாக சி-டாக் அமைப்பின் கோ-ஆர்டினேட்டர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலீஷ், இந்தி, உருது, பெங்காலி மொழிகளில் இந்த வகை கம்ப்யூட்டர் பரீசார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக